Friday, October 25, 2019

சுமந்திரனின் குண்டர்களுக்கு இனியும் கீழ்ப்படிய முடியாது... கெட்ட வழியிலேனும் பாடம் புகட்டுவோம்! - ஞானசார

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட சக்திகளின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்க முடியாது எனவும் அவர்கள் விதைக்கும் அடிப்படைவாதத்தை சொல்லிக் கேட்காவிட்டால் நல்ல அல்லது தீயவழியிலேயே ஒழிக்க வேண்டும் என்றும் பொதுபல சேனா பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குள் அதிக அரசாங்கங்களும் மேலும் சட்டத்துறைக்குள் மற்றும்பல சட்டங்கள் இங்குள்ளன.இந்த நிலைமையை மாற்ற நாட்டு மக்கள் தேர்தலில் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் தேரர் குறிப்பிட்டு்ளளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று நவாலா வீதி ராஜகிரியில் அமைந்துள்ள ஸ்ரீ சதர்மராம ரஜமகாவிகாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே தேரர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறியதாவது:

முல்லைத்தீவு குருகந்த விகாரை அறக்கட்டளைச் சபையின் செயலாளர் மணிக் கருணாரத்ன இன்று அவரது பெற்றோரது மரணத்தையும் கருத்திற்கொள்ளாது இங்கு வந்துள்ளார். முல்லைதீவில் என்ன நடக்கின்றது என்பதைத் தெளிவுறுத்தவே அவர் இங்கு வந்துள்ளார்.

உண்மையில் வடக்கில் இராணுவம் செயற்படுகின்ற முறையைப் பார்க்கும்போது அவர்களின் செயற்பாடானது வடக்கு ஒரு தனி மாநிலம் என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றது. சட்டத்திற்கு அதிகமாகத் தலைவணங்க முடியாது. கடலில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வது அதனை விட நல்லது.

சிறைக்குச் சென்ற எங்களுக்கு மீண்டும் சிறைக்குச் செல்வது பெரிய விஷயமே அல்ல. சட்டத்தைக் கையில் எடுத்திருப்பவர்கள் அதனைச் சரிவரச் செய்யுமாறே நாங்கள் கோருகின்றோம். குருகந்தயில் பெரும் தவறு நிகழ்ந்தது. அதனால் பிரதமரும் அரசாங்கமும் மகா சங்கத்தினரிடமும் இந்நாட்டு மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

வடக்கு பிரிவினைவாதத்தால் மூழ்கியுள்ளது. பிரிவினைவாதத்தை இல்லாதொழிக்க பொறுப்புள்ளவர்களை நாங்கள் அழைக்கிறோம். யாழில் ஒரு தனி அரசாங்கம் நடைபெறுகின்றது.

சுமந்திரன் இங்கு வந்து செட் அணிந்து நீதிமன்றம் செல்லலாம். சம்பந்தன் கொழும்பு வரை வரலாம். அனுராதபுரத்திற்கு செல்லும் வழியில் அவர்கள் எங்களுக்கே ஐயாவாதை நாங்கள் அனுமதிக்க முடியுமா? இந்த அடிப்படைவாதிகள் எங்கள் தூசுக்குச் சமன்....

சுமந்திரன் ஒரு கிறிஸ்தவ மத போதகர். இவர் போன்றவர்களுக்கு நாம் அடிபணிய முடியாது. நாம் இரண்டில் ஒன்றை நலவாகவோ தவறாகவோ சொல்லியே ஆகவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் இந்த நாட்டு மக்கள் அதற்கு தயாராக உள்ளனர். எந்த அரசாங்கம் வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் நாங்கள் முல்லைத்தீவில் குடியேறுவோம். பொலிஸார் கழற்றிய சீ.சீ.டீ.வி கேமராக்களை நிறுவுவோம். ஜனாதிபதித் தேர்தலின் போது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் இதனை நாங்கள் செய்யவில்லை.

2,500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரலாறு எங்களிடம் உள்ளது. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் நாங்கள் புத்த மதத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

மேதாலங்காரதிஸ்ஸ தேரரின் தகனம் குறித்த பிரச்சினை தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல. இதனைக் காரணம் காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வாக்குகளைப் பெற தீவிரமாகச் செயற்படுகின்றது. வெலிஓயாவில் உள்ள குருகந்த விகாரை மற்றும் சிங்களக் குடும்பங்களை ஜனகபுரத்திற்குப் புறந்தள்ளவே முயற்சிக்கின்றனர். தமிழ்த் தேசியத்தின் கனவு காண நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

அங்கு இதுதொடர்பில் கருத்துரைத்த முல்லைத்தீவு குருகந்த விகாரையின் அறக்கட்டளைச் சபையின் செயலாளரும், முன்னாள் வங்கி அதிகாரியுமான மாணிக் கருணாரத்ன குறிப்பிடும்போது:

'குருகந்த புராண விகாரை 2000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட விகாரையாகும். இந்த விகாரைக்கு புத்தராண்டு 244 இல் பெயரிடப்பட்டது. இந்த விகாரையில்தான் முதன் முதல் புத்தரின் புனிதப் பல் நினைவுச்சின்னத்தை முதலில் பார்வையிட்ட இடம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே பெயர் நாகனகல அல்லது முலதீவ் என்பதாகும். முலதீவ் என்பது முல்லைதீவின் பெயராகும். பாளி மொழியில் நாகனகல நானோரு என்று அழைக்கப்படுகிறது. இது இப்போது நயாருவாக மாறியுள்ளது.

குருகந்த புராண விகாரை பற்றி எழுதப்பட்ட சான்றுகள் பல உள்ளன. இலங்கை வரைபடத்தின் சிவப்பு மலை, 1832 பழுப்பு நிற மண் காரணமாக இது சிவப்பு மண்ணாக மாறியுள்ளது. இது போன்ற எழுதப்பட்ட சான்றுகள் அதிகம் உள்ளன. எனவே குருகந்த வரலாற்றை யாரும் திரிபுபடுத்தவே முடியாது என்று சவால் விடுகின்றேன்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

-கலைமகன் பைரூஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com