சத்தியமாகக் கூறுகின்றேன் வரியை இல்லாது செய்யமாட்டேன். அனுர குமார திஸாநாயக்க
தேர்தல் பிரச்சார மேடைகளில் யார் வாக்குறுதிகளை அதிகம் வழங்குவது என்ற போட்டி நிலவுகின்ற நிலையில் தான் ஜனாதிபதியானால் மக்களுக்கான வரியை இல்லாது செய்யமாட்டேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரச்சார மேடையொன்றில் பேசிய அவர் :
இந்த தேர்தல் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல். ஆனால் எனது பார்வையில் இது சிறந்த நத்தார் பாப்பாவை தேர்ந்தெடுக்கும் தேர்தல்போல் விளங்குகின்றது. கோத்தபாய தான் வந்தவுடன் உரத்தினை இலவசமாக வழங்குவதாக தெரிவிக்கின்றார். மறுபுறத்தில் சஜித்தும் விடுவதாக இல்லை நான் வந்தவுடன் பால்கோப்பை தருவேன் என்கின்றார். இன்னுமொருவர் கூறுகின்றார் நான்வந்தவுடன் வரியை இல்லாது செய்வேன் என்கின்றார்.
நான் கூறுகின்றேன் நாங்கள் நிச்சயமாக வரியை இல்லாது செய்யமாட்டோம். ஆனால் வரிக்கொள்கையை மாற்றியமைப்போம். வரி நிர்ணயிக்கவேண்டிய இடத்தில் அதை சரியாக நிர்ணயித்து , வரி குறைக்கவேண்டிய இடங்களில் அவற்றை குறைத்து மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அகற்றி புதிய வரிக்கொள்கையை உருவாக்குவோம்.
இறுதியாக கூறுகின்றேன் நாம் எதிர்கொள்வது இந்நாட்டின் ஆட்சியாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல். நான் உங்களுக்கு தெளிவாக கூறுகின்றேன் இந்த நாட்டை எங்களால் கட்டியெழுப்ப முடியும் என்றார் அனுரகுமார திஸாநாயக்க.
0 comments :
Post a Comment