Wednesday, September 18, 2019

ஹிஸ்புல்லா வின் வங்கிக்கணக்கு மோசடி கோப் கமிட்டி முன்னிலையில் அம்பலம்..

பெட்டிகலோ கெம்பஸ் மற்றும் ஹிரா அறக்கட்டளை நிதியத்தின் உரிமையாளர் என அடையாளப்படுத்தி கொள்ளும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலங்கை வங்கியில் கணக்கை ஆரம்பிக்க அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது நிறுவனக் குழு நேற்று (17) கூடியபோது இது தொடர்பில் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோரை நேற்று குறித்த குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் பெட்டிகலோ கெம்பஸ் மற்றும் ஹிரா அறக்கட்டளை நிதியத்தின் வங்கிக் கணக்குகள் குறித்து இலங்கை வங்கியின் அதிகாரிகள், உயர் கல்வி அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் அந்த குழுவில் முன்னிலை ஆகியிருந்தனர்.

இந்த தெரிவு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி குறித்த வங்கியில் வெவ்வேறு பெயர்களில் பேணப்பட்ட கணக்குகள் தொடர்பில் வினவியுள்ளார்.

இதற்கு இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் கே.பி.எஸ். பண்டார மற்றும் வங்கியின் மூத்த சட்ட அதிகாரி தயஞ்சனி பீரிஸ் ஆகியோர் பதிலளித்தனர்.

இது குறித்து அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரும் கோப் குழு உறுப்பினருமான சுஜிவ சேனசிங்கவிடமும் பொது நிறுவனக் குழு நேற்று விசாரணை நடத்தியது.

No comments:

Post a Comment