கவிஞரும் ஊடகவியலாளருமான இனியவன் இசார்தீன் கடத்தப்பட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக தொடர்சியாக தனது குரலை எழுப்பி வந்த ஊடகவியலாளரான இனியவன் இசார்தீன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் இலங்கைநெட்க்கு தகவல் அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 10ம் திகதி அதிகாலையில் வெளியே சென்ற அவர் அன்று மாலை வரை வீடு திரும்பாத நிலையில் அவர்கள் மேற்கொண்ட தேடுதல்களின் பயனாக அவர் இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆசன முன்பதிவை செய்யச் சென்றிருந்தபோது அங்குவைத்து அவர் கடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
சமீப காலமாக அவர் முஸ்லீம்களுக்கெதிரான அரசாங்கத்தின் இனவாதம் அடக்குமுறை, முஸ்லீம் பெண்களின் கலாசார ஆடை எதிர்ப்பு, அரச படையினரின் வன்முறை ஆகியவற்றை வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கி எழுதிவந்தமையால் அவருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு வழிகளில் சமூக சேவைகளை மேற்கொண்டுவந்த இசார்தீனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என குடும்பத்தினர் வேண்டி நிற்கின்றனர்.
0 comments :
Post a Comment