ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷவை கடற்படையின் லெப்டினன் தரத்துக்கு மீண்டும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய சேவையிலிருந்து நீக்கப்பட்ட யோஷித ராஜபக்ஷவை 2016 பெப்ரவரி 28 இலிருந்து கடற்படை லெப்டினன் ஆக மீண்டும் சேவையில் இணைப்பதற்கான உத்தரவில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வா கையொப்பமிட்டுள்ளார்.
இதனை கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment