ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட வேதன ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரசு ஊழியர்களின் மாத சம்பளம் 3 ஆயிரம் ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இது, 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரச ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளமானது, 2015 ஆம் ஆண்டில் அவரது அடிப்படை சம்பளத்தில் 107 சதவீத சம்பள அதிகரிப்பாகும்.
இந்த வேதன அதிகரிப்பின் ஊடாக அரச சேவையின் பல்வேறு துறைகளில் காணப்பட்ட வேதன முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கக்கூடும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேதன முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு எஸ்.ரனுக்கேவின் தலைமையில் கீழ் 11 பேர் அடங்கிய வேதன மறுஆய்வு ஆணையம் ஒன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.
இதன் பிரதிபலனாக அரச துறையில் அனைத்து ஊழியர்களினதும் வேதனம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில், விசேடமாக ரயில் மற்றும் தபால் சேவைகளில் உள்ள வேதன முரண்பாடுகள் இதனூடாக தீர்க்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment