விக்கினேஸ்வரன் சட்டவிரோதி! மேல்முறையீட்டு நிதிமன்று தீர்ப்பு. டெனீஸ்வரனுக்கு செலவு கட்ட உத்தரவு.
பிரதம நீதியரசராக இருந்த ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர் சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளார் என இலங்கை வரலாற்றில் முதல்முறையாக மேன்முறையீட்டு நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது.
பிரதம நீதியரசாராகவிருந்து தற்போது அரசியல் எடுபிடி , கோமாளியாக இனம்காணப்பட்டுள்ள சி.வி விக்கினேஸ்வரன் தொடர்பாகவே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மீன் பிடித்துறை முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என டெனீஸ்வரானால் தாக்கல்செய்யப்பட்ட வழக்கினை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியுள்ளது .
2018 ஆம் ஆண்டு தன்னை பதவியில் இருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவிற்கு தீர்ப்பளிக்கும் போது மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியவர்களினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்யவும் புதிய அமைச்சர் ஒருவரை நியமிக்கவும் முதலமைச்சருக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் டெனிஸ்வரனை பதவியில் இருந்து நீக்கவும் அந்த பதவிக்காக கே.சிவனேஷன் மற்றும் பீ.குணசீலன் ஆகியவர்களை நியமிக்கவும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் எடுத்த தீர்மானம் செல்லுபடியற்றது என தெரிவித்த நீதிபதிகள் டெனிஸ்வரனுக்கு வழக்கு கட்டணத்தை செலுத்துமாறும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.டெனிஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி. டெனிஸ்வரனை மேன்முறையீடு செய்திருந்தார்.
அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவரது மனுவில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment