தாமரை மொட்டினை கையிலேந்த பல்வேறு தரப்புக்கள தயாராகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ள குழுவினரின் தொகையை அதிகரிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தயாசிரி ஜெயசேக்கர, மஹிந்த அமரவீர, ரோஹண லக்ஷ்மன் பியதாச ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மூவருடன் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிரிபாலா டி சில்வாவையும் மேலும் இருவரையும் சேர்க்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்தக் குழு பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்து, அடுத்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன ரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அந்த மாநட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அழைக்க கட்சி முடிவு செய்துள்ளது.
0 comments :
Post a Comment