ஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு!
கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வழங்கவுள்ளோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நேற்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில் மாகாண சபைத் தேர்தல்களும் நடாத்தப்பட வேண்டுமே என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்காக முழு நாடும் தயாராகி இருப்பதாகவும், அதனால் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதே உசிதமானது எனவும் குறிப்பிட்டார்.
எதுஎவ்வாறாயினும், அதனோடு சேர்த்து மாகாண சபைத் தேர்தலையும் நடாத்தினால் எந்தவிதப் பிழையும் இல்லை எனவும், நீதிமன்றத்திற்குச் சென்று அதன் முடிவு வரும்வரை ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட மாட்டோம்... ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடாத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.
இல்லாவிட்டால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எக்காரணம் கொண்டும் எதற்காகவும் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட மாட்டோம் எனவும் அவ்வாறான முடிவினை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணையகத்திற்கும் அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment