Friday, August 2, 2019

சஜித்தை வேட்பாளராக நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பு.

எதிர்வரும் தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் ஐ.தே.க மற்றும் எதிர்தரப்பான மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு என்பவற்றிடையே உள்முரண்பாடுகள் மென்மேலும் வலுப்பெற்று வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித்தை நியமிக்கவேண்டிய கட்டாத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒருவர் இலங்கைநெட் க்கு தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் வினவியபோது மேற்கண்ட தகவலை உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவித்த அவர், கட்சியின் உயர்பீடத்திற்கு இவ்விடயத்தில் உடன்பாடு அற்றபோதும், மக்களிடமிருந்து சஜித் பிறேமதாஸ விற்கான வேண்டுதல் காணப்படுவதால் கட்சி கட்டாய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் கட்சியின் உயர் பீடம் கருஜெயசூரியவை விரும்புகின்றபோதும், உள்ளே அவருக்கு எதிர்ப்பு பலமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான „ஜனநாயக தேசியக் கூட்டணி' என்ற கூட்டணி ஒன்றை அமைத்து எதிர்வரும் தேர்தலை அவர்கள் எதிகொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் 5ம் திகதி கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் சக கட்சிகளுடன் செய்துகொள்ளப்படவுள்ளதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment