ஜனாதிபதி வேட்பாளருக்கு நிபந்தனைகள் விதிக்கிறது முஸ்லிம் காங்கிரஸ்!
வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்காமைக்கு உறுதிப்பாடு உள்ளிட்ட நிபந்தனைகள் பலவற்றை முன்வைக்கவுள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது தமது கட்சி முன்வைக்கும் என்றும் அதற்கு உடன்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தங்களது ஆதரவு கிடைக்கும் எனவும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் துணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்காமை மட்டுமன்றி கல்முனை, தோப்பூர், வாழைச்சேனை பிரதேசங்களில் உள்ள பிளவுகளை நீக்குவதற்கும் ஒத்தாசை வழங்குகின்ற ஜனாதிபதி வேட்பாளர் உடன்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்னும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளனவென்றும், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கான பிரேரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்குகின்ற ஜனாதிபதி வேட்பாளரையே முன்னிறுத்துவதாகவும் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அடுத்தவாரம் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment