ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
திருமதி குமரதுங்க சென்ற 15 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குச் சென்று, தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் சிலரை சந்தித்து கட்சியை எடுத்தார் கைப்பிள்ளைக் கட்சியாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.
அடுத்த வாரம் முதல் ஸ்ரீ.ல.சு.க. அமைப்பதில் தான் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும், அதற்காகத் தனக்குத் தனி அறை ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். பொது ஜன பெரமுனவின் தலைமையை ஏற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ மீது கட்சி பொதுச் செயலாளர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்திரிகா குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பண்டார அத்துகோரல மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment