Friday, August 16, 2019

நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்.... தமிழர் கூட்டணிக்கு நெத்தியடி!

வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லுார் கோவிலில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அங்கு சென்றிருந்தார்.

ஆகஸ்ற் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமான நல்லுார்க் கோவிலின் உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் 01 ஆம் திகதி முடிவடையும்.

கோவிலில் இடம்பெறும் மத அநுட்டானங்களில் கலந்துகொள்கின்ற பக்தர்களைப் பாதுகாப்பதற்காக முப்படைகளையும் நியமிக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதுடன், நல்லுார் கோவிலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து அகற்றுமாறும் கோரியுள்ளனர்.

அதுதொடர்பில் நல்லுார் கோவிலின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு வருகைதந்துள்ள இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவிடம் மேற்படி விடயம் தொடர்பில் வினவியபோது,

'பாதுகாப்பு வழங்குவது எங்கள் வேலை.... அது அவர்களின் வேலை அல்ல.... நாங்கள் பொதுமக்களின் நலன் கருதியே பணியாற்றுகிறோம்.... எங்களுக்கு எங்கள் வேலையைப் பார்த்துக் கொள்ள முடியும். கடவுளின் கடாட்சமும் எங்களுக்கு உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்கு கடவுளின் அருளும் கிடைக்காது.. இதற்குப் பின்னரும் கிடைக்காது... '

'உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற நிகழ்வைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் அவ்வாறான நிகழ்வொன்று நடக்காமல் இருக்கும் என்று எவ்வாறு சொல்ல முடியும். தனியாகச் சுற்றுகின்ற சில ஓநாய்களுக்கு அதைச் செய்யவியலும்... இல்லையேல் எந்தவொரு பைத்தியமும் அவ்வாறான காரியத்தைச் செய்ய முடியும். அதற்காகத்தான் நாங்கள் பாதுகாப்பு வழங்குகின்றோம். நாங்கள் இதன் மூலம் உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயலவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தவே முயல்கின்றோம்.' எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய உள்ளிட்ட சிலரும் இதன்போது கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment