Sunday, August 18, 2019

வடக்கில் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஆபத்து நேரலாம். மேலதிக பாதுகாப்பு கோருகின்றார் கோத்தபாய.

தேர்தல் பிரச்சாரத்தின்போது வடக்கில் பயங்கரவாதக் குழு ஒன்று தனக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தான் தகவல் வழங்கியுள்ளதாக தாமரை மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கருணா அம்மான் ஆகியோருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஸ்னைபர் வகைத் துப்பாக்கியும் வேறு விஷேட வகைத் துப்பாக்கிகளும் இதற்காகப் பயன்படுத்தப்படுத்துவதற்கு ஏற்பாடாகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

கோத்தபாயவின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக பொலிஸ் பயங்கரவாத விசாரணை பணிப்பாளருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டதாகத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment