Saturday, August 17, 2019

ஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...

ஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ரோஹான குறிப்பிடுகையில்: சந்தேகநபர் குருணாகலை எகுனுகொல்லவில்வசிப்பவர் எனக் குறிப்பிட்டார்.

சந்தேக நபர் தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் ஸஹ்ரானுக்குப் பிறகு இரண்டாவது தலைவனான நெளஃபர் மெளலவியின் இரண்டாவது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் ஸஹ்ரானுடன் சந்தேக நபர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் தனது தந்தையால் நுவரெலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தீ குண்டுகள் தயாரிப்பதில் பயிற்சி பெற்றதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சந்தேகநபரான முஹம்மது நெளபர் அப்துல்லாஹ் இதனைத் தெரிவித்தார்.

“ எனது தந்தை என்னை சுற்றுப்பிரயாணத்திற்காக நுவரெலியாவுக்கு அழைத்துச் சென்றார். நான் அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்றேன். அங்கே சுமார் நான்கு அல்லது ஐந்து மெளலவிமார் நின்றார்கள். அவர்கள் இரவு முழுவதும் 'துஆச்' செய்தார்கள். பின்னர் அனைவரும் தூங்கிவிட்டார்கள். மறுநாள் காலையில் பிரசங்கம் தொடங்கியது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களுமே பிரசங்கம் நடைபெற்றது.

ஜிஹாத் அமைப்பின் தேவைகள் குறித்து நிறைய பேசினார். அங்கே எனக்கு ஒரு பெரிய துப்பாக்கியும் ஒரு சிறிய துப்பாக்கியும் காட்டப்பட்டது. குண்டுகளை எவ்வாறு தயாரிப்பது என்று எனக்கு கற்பிக்கப்பட்டது.

பின்னர் நான் சத்தியம் செய்தேன். என்னோடு சத்தியம் செய்த அனைவருக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டப்பட்டது. எனக்கு 'அபூ ஹஸம்' என்று பெயர் சூட்டினார். நாங்கள் ஸஹ்ரான் மெளலவியின் முன் சத்தியப்பிரமாணம் செய்தோம். சத்தியப் பிரமாணம் செய்த பின்னரே எங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ”

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com