முறைப்பாடு செய்தவரின் வீட்டுக்குச் சேதம்... 12 பேர் கைது!
குடிபோதையில் 12 பேரைக் கொண்ட குண்டர்கள் வந்து தன்னைத் தாக்கியதுடன், வீட்டையும் சேதப்படுத்தி நஷ்டப்படுத்தியதாக தாக்குதலுக்கு உள்ளாகி திக்ஓய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முத்து கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, அதன் பின்னர் தனது கணவனைத் தாக்கியமை தொடர்பில் நேற்று (06) ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், அதன் பின்னர் முக்கிய சந்தேக நபர் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் தனது வீட்டுக்கு வந்து வீட்டின் கதவுகள், யன்னல்கள், வீட்டிலிருந்த மரத் தளபாடஙகள், இலத்திரனியல் உபகரணங்கள் என பலவற்றைச் சேதப்படுத்திவிட்டுச் சென்றனர் என முத்துக் கிருஷ்ணனின் மனைவி குறிப்பிட்டார்.
தாக்குதல் தொடர்பில் நேற்றுச் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், தோட்டத்திற்கு வந்து தாக்குதல் நடாத்திய சந்தேகநபர்கள் 12 பேரையும் பொலிஸார் கைது செய்தனர் என வீட்டு உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அந்தத் தோட்டத்திலுள்ள ஹற்றன் குடாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment