ஐயோ! 11 கோடி லஞ்சமா? ஒருபோதும் இல்லவே இல்லை என்கின்றார் செல்வம் அடைக்கலநாதன்.
வவுனியா பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்கு சீனித்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேவையான அரச காணி மற்றும் பிற அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ரெலோ அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் லஞ்சமாக 11 கோடி ரூபாவினை பெற்றுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
குறித்த செய்தியினை முற்றாக மறுப்பதாகவும் அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு என்றும் செய்தியினை வெளியிட்ட இணையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் சபாநாயகரிடம் முறையிடவுள்ளதாகவும் மிரட்டியுள்ளார் செல்வம் அடைக்கலநாதன்.
இதேநேரம் ரெலோ அமைப்பின் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள், சீனித்தொழிற்சாலை ரெலோ அமைப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தொழிற்சாலையூடாக அமைப்பு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் வளர்சியடைவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன், அவ்வளர்சியினை சகித்துக்கொள்ள முடியாத நபர்களின் பொய்குற்றச்சாட்டு என்றும் பரப்புரை செய்து வருகின்றனர்.
மறுபுறத்தில் குறித்த சீனித்தொழிற்சாலையானது பிரித்தானியாவிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர் ஒருவரே ஆரம்பித்துள்ளதாகவும், அவர் இத்தொழிற்சாலைக்கான காணி மற்றும் அனுமதிகளை பெற்றுக்கொள்ள அடைக்கலநாதனுக்கு லஞ்சம் வழங்கியே பெற்றுக்கொண்டதாகவும், குறித்த தொழிற்சாலையை ரெலோ தொழிற்சாலை என முத்திரை குத்த முற்படுவது கபட நோக்கம் கொண்ட செயலாகும் என்றும் தொழிற்சாலையின் உரிமையாளர் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
எது எவ்வாறாயினும் அடைக்கலநாதன் அண்மைக்காலமாக தமிழ் மக்களின் தலையினை ஐக்கிய தேசியக் கட்சியிடம் அடகு வைத்துள்ளமை தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது விடயத்தில் ரெலோவின் உட்கட்சி ஒன்றுகூடல்களின்போது பலமுறை நேரடி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
செல்வம் லஞ்சம் வாங்கவில்லையாயின் இவ்வாறான அதி சொகுசு வாகனங்களை கொள்வுனவு செய்ய எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வி மேலெழுகின்றது.
0 comments :
Post a Comment