முதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...
எதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச.
நேற்று ஹட்டன் D.K.W கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற முதல் மகளிர் சம்மேளனத்தின் பிரதம விருந்தினராக பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தோட்டப்புற பெண் தொழிலாளர்களின் சுகாதார நிலைமை,வாழ்வாதாரம் பற்றியும் கலந்துரையாடப் பட்டது.
இதன் போது பெண் தொழிலாளர்களால் முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் சிறந்த தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்து பேசுகையில் :
அமைச்சர் சஜீத் பிரேமேதாச என்பவர் நாடளாவிய ரீதயில் மக்களுக்கு சேவையினை முன்னெடுத்து வருவபவர் அந்தவகையில் மலையக மக்கள் எதிர் பார்க்கின்ற காணி பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக தீர்வினை பெற்றுகொடுப்பார்.
மலையகபெருந்தோட்டங்களில் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் வாழ்ந்துவருவது நாடறிந்த உண்மை. மலையகம் என்பது எமது இலங்கை நாட்டின் ஒரு பகுதி.; நாட்டின் கல்வி என்பது கொழும்பு பகுதியில் ஒரு விதமாகவும் மலையகத்தில் ஒருவிதமாகவும் இருப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.
நாட்டில் வாழ் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமான கல்வி கிடைக்கவேண்டும் கல்வி என்பது அனைவருக்கும் அவசியமானது ஒரு மனிதனுடைய வாழ்க்கையினை தரபடுத்துவதில் கல்வி என்பது முதன்மை பெருகிறது. இந் நிலையில் இங்கு வந்திருக்கின்ற பெண்களுடன் கலந்துரையாடிய போது இச்சமுகத்தின் கல்வி நிலை பல்வேறு சாவால்களுக்கு மத்தியில் இருப்பதை என்னால் உனரமுடிந்தது.
அமைச்சர் சஜித்பிரேமேதாச அவர்களுடைய பணிப்புரையின் கிழ் மலையகத்தில் மாத்திரம் அல்ல இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து ஏழைமக்களுடைய பிள்ளைகளுக்கு புலமை பரீசில் எனும் வேலைத்திட்டத்தை கொண்டு வந்து அதனூடாக நீங்களும் கல்வி ரீதியில் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த வேலைத்திட்டத்தினை வார்த்தையில் மாத்திரம் கூறாது நடைமுறைக்கு கொண்டு வருவேன். ஏன் எனில் சிலர் இதுபோன்ற கலந்தரையாடல்களில் வாக்குறுதிகளை வழங்கியிருப்பார்கள் அதனை நிறைவேற்றியிருக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment