Wednesday, July 31, 2019

றிசார்ட் பதியுத்தீன் பாணியில் காடழித்து காணி அபகரிப்பில் த.தே.கூ பா.உ சாந்தி சிறிஸ்கந்தராசா.

வில்பத்து காடுகளை அழித்து பெரும்சொத்து சேர்த்துள்ளதாக றிசார்ட் பதுயுதீன் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாந்தி சிறிஸ்கந்தராசாவும் அதே தேசவிரோத செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக செல்வபுரம், முறிகண்டி பிரதேசத்தை சேர்ந்த சப்தசங்கரி என்பவரால் முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் முறையிடப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு தொடர்பில் மாவட்ட செயலரால் ; சபாநாயகர் அலுவலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் முறைப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிவரும் நிலையில் விசாரணைகளை அரசு ஆரம்பிக்குமா என முறைப்பாட்டாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எது எவ்வாறாயினும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையை சபாநாயகர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

சாந்தி சிறிஸ்காந்தராசாவினால் 10 ஏக்கர் காடு பா.உ முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் அழிக்கப்பட்டுள்ளதுடன் , பாலி ஆற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்குகளை அபகரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பதவிகளை பெற்றுக்கொண்ட பின்னர் சொத்துச் சேர்ப்பதற்காக பல்வேறு வழிகளில் அப்பதவியினை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் முல்லைத்தீவு காணிவிககாரங்களுக்கான அரச உத்தியோகித்தர்களான சேந்தன் , சரவணன் எனும் இருவரும் சாந்தியின் எடுபிடிகள் என்றும் அவர்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டு அவர்களை இடமாற்ற முற்பட்டபோது சாந்தி மற்றும் மாகாண சபை உறுப்பினரான ரவிகரன் ஆகியோர் ஆகியோர் தமது செல்வாக்கினை பயன்படுத்தி இடமாற்றத்தை இரத்துச் செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment