Monday, July 15, 2019

அம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.

முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

2017ம் ஆண்டு திவிநெகும சந்தை நிகழ்வு மாவட்டச் செயலகத்திற்கு அருகில் ஒழுங்கு செய்யப்படிருந்தது அதற்கான தளபாட வசதிகள் கோயிற்குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்திடம் இருந்து பெறப்பட்டு அதற்கான செலவாக 98000 ரூபாய் நிதி திவிநெகும திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் குறித்த 98000 ரூபாய் நிதி கோயிற்குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரில் பெறப்படாமல் சமுர்த்தி அதிகாரி ஒருவரின் நெருங்கிய சகாவின் பெயரில் பெறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த 98000 ரூபா நிதி கோயிற் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் தளபாடங்கள் என்பவற்றை காட்டியே பெறப்பட்டுள்ளதாகவும். கோயிற் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவரிடம் ரூபா 2000 மட்டுமே சமுர்த்திக்கு பொறுப்பான மாவட்ட அதிகாரியால் வழங்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 96000 ரூபா நிதிக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளதாக அக்கிராம மக்களும் கிராம அபிவிருத்தி சங்கமும் விசனம் தெரிவித்துள்ளனர்

மேலும் இவ் ஊழல் மோசடி தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment