றிசார்டின் எம்பி யின் ஆட்களுக்கு ஹக்கீம் எம்பியின் ஆட்கள் ஒலுவிலில் போட்டுத்தாக்கினர்.
ஒலுவில் பிரதேசத்திற்கு சென்றிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரசபை தங்குமிடப் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலை மேற்கொண்ட இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட குழுவினரே இத்தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தொடர்பாக பா.உ மஃறூப் தெரிவித்த கருத்து தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கும் வகைiயிலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டும்பொருட்டு வீதியில் ரயர்களை போட்டு எரித்து சாதாரண மக்களின் செயற்பாடுகளுக்கு குந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இத்தாக்குதலில் மஃறூப் க்கு எவ்வித காயங்களும் ஏற்படாதபோதும் வாகனம் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் நிலமைகளை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த சிலர் றிசார்ட் பதியுதீனது கட்சியில் இணைந்தமை தொடர்பிலேயே இம்முரண்பாடு உருவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment