சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற புதிய பிளாவில் புளித்த கள்ளு.
எதிர்வரும் 4 மாதங்களின் பின்னர் ஜனாதிபதி தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என பல்வேறு தேர்தல்கள் இடம்பெறவுள்ளது.
இத்தேர்தல்களின் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக அரசியல் கட்சிகள் தமது வழமையான வியூகங்களை வகுக்க தொங்கியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ' நாங்கள் ஆயுதம் தூக்குவதற்கும் தயங்கமாட்டோம்' என்று தேர்தல் குண்டு போட்டுள்ளார்.
இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் , சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தேர்தல் கூட்டமைப்பது தொடர்பில் பலசுற்று பேச்சுக்களை நடாத்தி முடித்துள்ளது. அப்பேச்சுக்கள் வெற்றியளித்து கூட்டணியாக தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் 'சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன' என தமது கூட்டணிக்கு பெயரிட இரு தரப்பும் இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் தேர்தல் கூட்டுக்கள் என்பது மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் கூட்டுச் சதி என்பது வரலாற்று ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கூட்டுச் சேரும் கட்சிகள் கதிரைகளை பெற்றுக்கொண்ட பின்னர் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஒன்றிணைந்து பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பீமன்.
0 comments :
Post a Comment