விஜயகலாவின் பிரதேசவாதம்! போர்க்கொடி தூக்குகின்றது இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்.
அண்மையில் வடகிழக்கை சேர்ந்த ஆசிரிய உதவியாளர்கள் 1019 பேருக்கு நிரந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. குறித்த நியமனம் வழங்கும் விடயத்தில் மண்ணெண்னை மகேஸ்வரனின் மனைவியான விஜயகலா பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாகவும், அவர் மலையத்தில் நிரந்தர நியமனம் இன்றி கடந்த 4 வருடங்களுக்கு மேலாக 10000 ரூபாவிற்கு கடமை புரியும் 3021 ஆசிரியர்களை புறக்கணித்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் மலையக ஆசிரிய உதவியாளர்களுக்கு உடனடி நியமனத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அக்கடித்தில் மிக குறுகிய அரசியல் இலாபத்திற்காக மிக கஷ்டமான சூழலுக்கு மத்தியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள துன்ப வாழ்கையை மேற்கொள்ளும் தோட்டபுர மக்களின் பிள்ளைகளுக்காக, அர்ப்பணிப்போடு கஷ்டத்துக்கு மத்தியில் சேவை புரியும் இவ் ஆசிரியர்களின் சேவையை உடனடியாக நிரந்தரமாக்கும் படி கேட்டுக் கொள்ளும் எமது சங்கம், குறுகிய காலத்தில் இக்கோரிக்கையை நிறைவேற்றாவிடின் எவ்விதமான முன் அறிவிப்புகளும் இன்றி சகல ஆசிரியர்களையும் ஒன்றினைத்து பாரிய போராட்டம் ஒன்றிற்கு செல்ல வேண்டிவரும் என்பதனை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment