மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் வயோதிபரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று மாலை வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பத்து வருடங்களாக தனிமையில் இருந்து வந்த வயோதிபரான கணேசமூர்த்தி சாமித்தம்பி (74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவரது உடலில் சிறு காயங்கள் காணப்படுவதால் இவரது மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வழமையாக தனது வீட்டில் உள்ள மாந்தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி விட்டு அருகில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று வரும் இவர், நேற்றைய தினம் மகளின் வீட்டிற்கு வராமையினால் அவரை தேடிச் சென்ற மகள் தனது தகப்பனார் மலசலகூடத்தில் இறந்து கிடப்பதை கண்டு மட்டக்களப்பு பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் குற்றத்தடயவியல் பொலிசாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment