Thursday, July 25, 2019

புலனாய்வு தகவல்கள் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை

இதுவரையில் நாட்டின் புலனாய்வு பிரிவு கூட்டங்களுக்கு வருகைதர பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லதீப் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சில முக்கியமான புலனாய்வு தகவல்கள் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு தகவல் தொடர்பிலான கடிதம் கிடைக்கப்பட்ட பின்னர் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரி ஒருவருடன் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக விஷேட அதிரடிப்படையினர் இருந்த காரணத்தினாலேயே இந்த நடவடிக்கையை எடுத்தாக அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் உதவியை நாடாத காரணத்தினால் தான் கொழும்பு பிரதான பள்ளிவாசல் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் உதவி வேண்டுமாயின் பொலிஸ் மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment