ஐக்கிய தேசியக் கட்சியின் அடிமைகள்போல் த.தே.கூ செயற்படுகின்றார்களாம்! கூறுகின்றார் அங்கஜன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றுள்ளதுடன் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அடிமைகள் போன்று செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில் :
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை இல்லாத ஆதரவினையே வழங்கி வருகின்றது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் அடிமைகள். அவர்கள் தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவினையே வழங்குகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது. ஆரம்பத்தில் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என பல்வேறு கருத்துக்களை கூறியவர்கள், நாடாளுமன்றில் எவ்வித நிபந்தனையும் இன்று ஆதரவு வழங்கியுள்ளனர்.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை என எமது அபிலாலைகளை விட்டுவிட்டு காணக்காளர் நியமனத்தில் நிற்கின்றனர். எமது அபிலாசைகள் இல்லாது போய்விட்டது. இப்போது இஸ்லாமிய மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு அந்த நியமனம் முஸ்லிம்களுக்கே வழங்கப்படுமென ரணில் விக்கரமசிங்க வாக்குறுதி அளித்துள்ளார்.
தேசிய கூட்டமைப்பு மக்களின் நலன் சார்ந்து செயற்படாது தமது நன்மைகளிற்கானவும், தமது நலன்களிற்காகவும் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.
எஞ்சி இருக்கின்ற காலத்திலாவது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றகூடியவாறு அவர்கள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், தேர்தல் நெருங்குகின்றபோது மாத்திரம் மக்கள் நலன்சார்ந்து செயற்படுவது போன்று காட்டி மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
0 comments :
Post a Comment