Friday, July 19, 2019

தோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா? மீண்டும் சீறிப்பாய்கின்றார் சிறிதரன்.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய மற்றும் கன்னியா ஆலய விவகாரங்களை பேசுபொருளாக எடுத்து தமிழ் மக்களின் காதில் வழமைபோல் பூச்சூட திட்டமிட்டுள்ளது.

ஆனாலும் வடகிழக்கில் தேர்தல்களில் போட்டியிடாத அமைச்சர் மனோ கணேசன் இவ்விவகாரங்களுக்கான தீர்வுகளை தேடுவதில் ஈடுபட்டுவருகின்றமை அண்மைக்காலமாக அவதானிக்கக்கூடியதாகவிருக்கின்றது. அந்தவகையில் மேற்படி பிரச்சினைகளுக்கான தீர்வினை பேச்சுவார்த்தை ஒன்றின் மூலம் முடிவுக்கு கொண்டுவரும்பொருட்டு நேற்று ஜனாதிபதியுடனான சந்தப்புக்கு ஏற்பாடு செய்து அதற்கான அழைப்புக்களை சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் வழங்கிய மனோ கணேசன் இறுதியில் 'நான் இனிமேல் வடகிழக்கு பிரச்சினையில் தலையிடமாட்டேன்' என அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிச்சைக்காரன் புண் அரசியல் செய்துவரும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் குறித்த சந்திப்புக்கு சென்று பிரச்சினைகளுக்குரிய தீர்வினை தேடுவதை தவிர்த்துள்ளனர். எதுவாயினும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பங்களிப்பை த.தே.கூ செய்வார்கள் என மனோ கணேசன் எதிர்பார்த்தது குறித்து அவரது அறிவை கேள்விக்குட்படுத்தவேண்டி உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னம் இன்றி இடம்பெற்ற கூட்டத்தில் சில தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் பிரச்சினைகளுக்கான தற்காலிக தீர்வுகளும் ஜனாதிபதியிலால் அதிரடியாக அறிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காதது தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவ்விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் : 'நான் சம்பந்தன் ஐயாவிடம் , உங்களுக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றதாக எனக்கேட்டேன். அழைப்பு ஒன்றும் வரவில்லை என்றார். உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாயின் போகவேண்டியதில்லை என்று முடிவெடுத்தோம்' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பான விடயம் பேசப்படவிருக்கின்றது என்பது சுமந்திரனுக்கு நன்றாக தெரிந்திருக்கின்றது. அதற்கான அழைப்பும் அவருக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. ஆனால் சம்பந்தனுக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்பதற்காக தாங்கள் போகவில்லை என்று சுமந்திரன் கூறுகின்றார். அதாவது தமக்கு வெற்றிலை வைத்து அழைக்கவில்லை என்றால் அவர்கள் தமிழ் மக்களை எந்த பாதாளத்திற்கும் தள்ளுவார்கள் என்பது சுமந்திரின் ஒப்புதல் வாக்குமுலத்தின் ஊடாக நிரூபணமாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை கிளிநொச்சி பா.உ சிறிதரனிடம் சில தரப்புக்கள் வினவியபோது , எங்களுக்கு தோட்டக்காட்டான் தலைமை தாங்குவதா என சிறினாராம் என இலங்கைநெட் க்கு தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த செய்தி ஒன்று தொடர்பில் சர்சை ஏற்பட்டபோது அச்செய்தியை வெளியிட்ட நபரை 'வடக்கத்தேயான்' என விழித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட சிறிதரன் மீண்டுமொருமுறை தோட்டக்காட்டான் என மனோ கணேசனை விழித்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com