Friday, July 19, 2019

கோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன! மறவன்புலவு சச்சிதானந்தன்

மாண்புமிகு அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கு, வரலாறு தந்த பெருமகன் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களுக்குச்

சிவசேனையின் அன்பான வேண்டுகோள்

கத்தோலிக்க மேலாதிக்க முன்னெடுப்புகளால் மாண்புமிகு மனோ கணேசனை வடகிழக்குக்கு வராமல் தடுத்துள்ளனர். தாங்களும் செய்ய முடியாததை மாண்புமிகு மனோகணேசன் செய்கிறார் என்ற பொறாமையு ம் அசூசையும் கத்தோலிக்கரல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்திருக்கலாம்.

மாண்புமிகு மனோ கணேசன் இலங்கை முழுவதற்கும் அமைச்சராக இருக்கிறார். இந்து சமயத் துறை அமைச்சராக இருக்கிறார். இலங்கை முழுவதும் இந்துக்கள் இருக்கிறார்கள்.

வடகிழக்கில் அவர்கள் பெருமளவில் இருந்தாலும் மலையகத்தில் ஆறு மாவட்டங்களிலும் அவர்கள் கணிசமான தொகையில் இருக்கிறார்கள் மேற்கு வடமேற்கு மாகாணங்களிலும் அவ்வாறு பழம் பராம்பரியத்துடன் இருக்கிறார்கள்

வடகிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக வாயடைத்துப் போய் நிற்கிறேன், ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கின்றேன், செய்யவும் மாட்டேன் என்ற மாண்புமிகு மனோ கணேசனின் இந்த முடிவு வருந்தத்தக்கது.

பொறுப்பற்ற சிலரால், அண்மைக்கால அரசியலுக்குள் நுழைந்த அரசியல்வாதிகளின் தாக்கத்தால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கக் கூடும்

இந்த வாரம் சென்னைக்கு வந்த தமிழ் கூட்டமைப்புக் குழுவிடம் பாரதிய சனதாக் கட்சியின் மேனாள் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னார்கள், பொறுப்பற்றவர்களை நீங்கள் பொறுப்புகளில் வைத்திருப்பதால்தான் தமிழர்களுடைய அடிமைத்தனம் தொடர்கிறது என.

இலங்கையில் வாழும் இந்துக்கள் சார்பாக உங்களை வேண்டுகிறேன்.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புத்தர்களால் கிருத்தவர்களால் முகமதியர்களால் நாங்கள் நசுக்கப்படுகிறோம்.

கோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன, தொல்பொருளார் குடைகின்றனர், காளியை நீக்கிவிட்டு மசூதி, பிள்ளையாரை நீக்கிவிட்டுப் புத்தர், கண்ணகியை நீக்கிவிட்டு மரியாள்.

மாண்புமிகு மனோ கணேசன் அவர்களே சைவர்கள் யாரிடம் போவார்கள்? இந்து சமயத் துறை அமைச்சராக இருக்கும் உங்களிடம் போகாமல் வேறு யாரிடமும் நாங்கள் போவது?

மதமாற்றிகளின் கொடுமை தாங்க முடியவில்லை. எங்களது பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி மூன்று நான்கு மனைவியரைக் கொண்டு வாழ்கின்ற சூழலில் நாங்கள் யாரிடம் போவோம்?

மாண்புமிகு மனோ கணேசன் அவர்களே இலங்கை இந்துக்கள் சார்பின் உங்களை அழைக்கிறேன். சைவர்கள் சார்பில் உங்களை அழைக்கிறேன். எங்களது உரிமைகளை மீட்டுத் தருவதில் உழையுங்கள். பொறுப்பற்றவர்களின் தாக்கத்தால் எங்களுக்காக உழைப்பதைக் கைவிடாதீர்கள்.

நீங்கள் வரலாற்று நாயகன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com