பூஜித மற்றும் முன்னாள் பாதுகப்பு செயலரை மன்றில் ஆஜர்செய்ய ஆலோசனை. கைது செய்யப்படுவார்களா?
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேக நபர்களாக குறிப்பிட்டு அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளபோதும், இதுவரை அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இன்று (01) மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பிய சட்டமா அதிபர் அறிவுறுத்தல் தொடர்பில் இதுவரையில் செயற்படாமை தொடர்பில் காரணங்களை இன்றை தினத்திற்குள் எழுத்து மூலம் அறிவிக்குமாறு தெரியப்படுத்தியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் சட்ட மா அதிபர் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முரண்பட்டுக்கொள்ளுகின்ற இக்கட்டான சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறித்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தபோதும், அழிவினை தடுப்பதற்கு போதிய நடவடிக்கையை மேற்கொள்ளாது கடமையை உதாசீனம் செய்துள்ளார்கள் என்ற குற்றச் சாட்டுக்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment