Wednesday, July 3, 2019

அமெரிக்க இராணுவத்தால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கு முழுப்பொறுப்பை ஜனாதிபதி ஏற்க வேண்டும். நாலக தேரர்.

அமெரிக்காவுடன் இலங்கை செய்து கொள்ளவுள்ள சோபா ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு எற்படவுள்ள பாதிப்புக்கான முழுப்பொறுப்பையும் நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் மைத்திரிபால சிறிசேனவே ஏற்றுக்கொள்ளவேண்டும் என தேசிய உரிமைகளை பாதுகாப்போம் என்ற அமைப்பின் தலைவர் பெங்கமுவ நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

சோபா ஒப்பந்தத்தினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பில் மக்களுக்கு விளக்கும் ஊடகச் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்:

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அமெரிக்காவிற்கு இலங்கையில் தளம் அமைக்கும் நோக்கம் இல்லை என்று கூறுகின்றார். அவ்வாறாயின் அமெரிக்கப்படைகள் இந்நாட்டினுள் வீசா இன்றி நுழையலாம் என்று எதற்காக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பியதுடன் ' அமெரிக்க தூதுவரிடம் பொய் பேசவேண்டாம் என்று கூறிக்கொள்வதாகவும்' தெரிவித்தார்.

குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட துடிக்கின்ற அரசாங்கமே அதனால் ஏற்படவுள்ள அனர்த்தத்திற்கு முழுப்பொறுப்பையும் எற்கவேண்டும் என்றும் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment