விக்கியின் அரசியல் கடையின் கிளை ஒன்று மட்டக்களப்பிலும்!
முன்னாள் நீதியரசர் என்று கூறப்படும் அரசியல்வாதி விக்கினேஸ்வரனின் புதிய கட்சியின் கிளை ஒன்று இன்று மடக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ள விக்கினேஸ்வரன் தலைமைதாங்கும் கட்சியின் கிளையே இவ்வாறு மட்டக்களப்பு மாமாங்கம் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக வடமாகாணத்தை கைப்பற்றிய விக்கினேஸ்வரன் தனது பதவிக்காலத்தில் சபையினூடாக மக்களுக்கு புரியவேண்டிய கடமைகளை தட்டிக்கழித்திருந்தார், அபிவிருத்திக்காக அரசினால் ஒதுக்கப்பட்டிருந்த நிதியை திறைசேரிக்கு மீண்டும் திருப்பியனுப்பியிருந்தார் என்ற பாரிய குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியிருக்கும் நிலையில், புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி நகர்வது அவதானிக்கப்படுகின்றது.
முதலமைச்சராக செயற்பட்டபோது மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் அடிப்படை உரிமையை மீறினார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகி நீதிமன்றில் விக்கினேஸ்வரனுக்கு எதிரான மனித உரிமை மீறல்வழக்கைகொன்று விசாரணையில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment