அமெரிக்க - இலங்கை சோபா ஒப்பதந்தத்தின் ஆபத்தான பாகங்கள் இதோ!
அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ள முயற்சிக்கின்ற சோபா ஒப்பந்தமானது இலங்கையின் இறையாண்மையை முற்றிலும் நிராகரிக்கின்றது என்பதை அவ்வொப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ள சரத்துக்கள் உறுதி செய்கின்றது.
இலங்கையின் தேசப்பாற்றாளர்கள் பலராலும் எதிர்க்கப்படும் குறித்த ஒப்பந்தத்தில் பின்வரும் மிகவும் ஆபத்தான சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது:
இலங்கையினுள் நுழையும் அமெரிக்க சிப்பாய்களுக்கு செல்லுபடியான கடவுச்சீட்டோ இலங்கைக்கான வீசாவோ அவசியமற்றதாகின்றது.
இந்நாட்டினுள் நுழையும் அமெரிக்க கப்பல்கள் , விமானங்கள் மற்றும் ஹெலிக்கொப்டர்களை எவரும் சோதனையிடமுடியாது.
விமான நிலையத்தினூடாகவோ அன்றில் துறைமுத்தினூடாகவோ எடுத்துவரப்படும் பொருட்களுக்கு எவ்வித வரிகளும் அறவிடமுடியாது.
இங்கே அமெரிக்க வாகனங்களை பயன்படுத்துகின்றபோது அவற்றுக்கு இலங்கையின் அனுமதிப்பத்திரமோ அன்றில் இலங்கையின் சாரதி அனுமதிபத்திரமோ பெற்றிருக்கவேண்டியதில்லை.
அமெரிக்கப்படையினர் நாட்டின் எப்பாகத்தினுள்ளும் அமெரிக்க இராணுவ உடையில் ஆயுதங்களுடனும் யுத்த உபரகணங்களுடனும் நடமாட முடியும்.
இலங்கையின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் நிலம் என்பவற்றை அமெரிக்கா தனது தேவைக்களுக்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும். இதற்காக இலங்கையின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை கிடையாது.
அமெரிக்க படையினர் இங்கு எதாவது குற்றம் புரிந்தால் அங்குற்றத்திற்கு இலங்கை நீதியின் பிரகாரம் சட்டத்தின் முன் நிறுத்த முடியாது, மாறாக அமெரிக்க நீதியின் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்படும்.
குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையினுள் நுழையும் அமெரிக்கப்படைகள் பிராந்தியத்தில் யுத்தம் ஒன்று தோன்றுகின்றபோது இங்கிருந்து தாக்குலை தொடுக்கும்போது மேற்கொள்ளப்படக்கூடிய எதிர்த்தாக்குதலில் இந்நாடு எரிந்து சாம்பலாகும் என்பதை சற்றும் சிந்திக்காத ஆட்சியாளர்கள் இவ்வாறானதோர் ஆபத்தான ஒப்பந்தத்தை செய்து கொள்ள முயல்கின்றனர்.
இலங்கை அணிசேரா கொள்கை கொண்ட ஒரு நாடாகும். யுத்தம் ஒன்று இடம்பெறுகின்றபோது நாம் எந்தவொரு பக்கத்தையும் தெரிவு செய்யாத பட்சத்தில் எம்மை நாம் அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் நாம் அமெரிக்கப்படைக்கு யுத்தம் புரிய எமது நிலத்தையும் கடலையும் வழங்கிவிட்டு அணிசேரா கொள்கையை கொண்டுள்ளோம் என்பது அர்த்தமற்றதாகின்றது.
எனவே பாரிய அழிவு ஒன்றுக்கு வழிவிடும் குறித்த ஒப்பந்தம் எவ்வித நிபந்தனையும் இன்றி எதிர்க்கப்படவேண்டியதாகும். இதை எதிர்ப்தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தரப்புகட்கு நாட்டுமக்கள் யாவரும் தமது ஆதரவை வழங்குவது தலையாய கடமையாகும்.
பீமன்.
0 comments :
Post a Comment