Thursday, July 11, 2019

தமிழ் மக்களை ஐ.தே.க அரசிடம் த.தே.கூ அடகு வைக்கும் ஒப்பந்தம் இதோ!

அரசுக்கெதிராக ஜேவிபி யினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைய கொண்டுள்ளது என்பதை நேற்றைய மற்றும் இன்றைய பாராளுமன்ற உரைகள் தெளிவுபடுத்தியுள்ளது.

நேற்யை தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையின் போது மன்னார் மாவட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளில் ஆட்கள் குடி போகாமை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமை தொடர்பில் பேசினர். இவ்விடயத்தில் வழமைபோல் கத்தி கூச்சலிட்டு தாங்கள் வீர ஆவேசப் பேச்சுக்களால் சபையை அதிரவைத்தனர்.

ஆனால் மக்களுக்கு உதவாத அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்க தயங்கும் அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதற்கான எந்த சமிக்கைகளும் காண்பிக்கப்படவில்லை. அதாவது மக்களை ஏமாற்றுவதற்காக ஆவேஷப்பேச்சுக்களை பேசும் அவர்கள் நம்பிக்கை இல்லாப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்து ஐக்கிய தேசியக் கட்சியயை காப்பாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

நேற்று முன்தினமிரவு அலறிமாளிகையில் வாய்மூலமாக செய்து கொள்ளப்பட்டுள்ள அவ்வொப்பந்தத்தில் :

1.கம்பெரலியா வேலைத்திட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் எஞ்சிய நிதிகளை உடனடியாக விடுவிப்பதாகவும்.

2.பனை அபிவிருத்தி நிதியத்திற்கான நிதியை விரைவில் விடுவிப்பதாகவும்

3.பிரதமரின் கீழ் உள்ள மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிபாரிசின் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும்

4.வரவிருக்கும் பொது தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலுக்கான தேர்தல் செலவுகளை ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்பேற்றுக் கொள்ளும் என்ற விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றும் நேற்றும் த.தே.கூ பா.உ க்கள் பாராளுமன்றில் பேசும் உணர்ச்சி பேச்சுக்களை தமது அடிவருடிகளின் ஊடகங்களில் நாளை பிரசுரித்து வழமைபோல் தமது காட்டிக்கொடுப்புக்களை மறைத்துவிடுவர்.

அந்தவகையில் இன்று பாராளுமன்றில் அரசினை பாதுகாப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவுள்ள வரலாற்றுத்துரோம் பத்தோடு ஒன்று பதினொன்றாக மக்களால் மறக்கப்படும்.

No comments:

Post a Comment