Friday, July 19, 2019

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 1800 கோடி ரூபா) பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரயவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நிதி குற்ற விசாரணை பிரிவு நேற்று நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

இலங்கை அரச வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த பணமானது ஹிரா நிறுவனம், மட்டக்களப்பு கம்பஸ் கொலேஞ் பிறைவட் லிமிட்டட் மற்றும் மட்டக்களப்பு கம்பஸ் பிறைவட் நிறுவனம் என்ற பெயர்களில் இயங்கும் பல்கலைக்கழக நிர்மாணத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக அன்றில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் லங்கா ஜெயரட்ண அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

சவுதியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றினால் குறித்த பணம் ஹிஸ்புல்லாவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com