NGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசீக், தான் என்ஜீஓ க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதாக ஒத்துக்கொண்டுள்ளார்.
மேலும் தானே தற்கொலைதாரி ஒருவனுடைய காதலியை இஸ்லாத்திற்கு மாற்றிதாயதாகவும் ஏற்றுக்கொண்டுள்ள அவன் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து நிதியினை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபச்சவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் சாட்சியமளிக்கையில் தெரிவித்தமை வருமாறு.
கேள்வி:- உங்களை இங்கு விசாரணைக்கு அழைக்க சில காரணிகள் உள்ளன. உரிய காரணிகளை மாத்திரம் நீங்கள் குழுவிடம் கூறவேண்டும். உங்களைப் பற்றி கூறுங்கள்.
பதில் :- நான் ராசிக் ரபீட்தீன், மக்கள் மத்தியில் அப்துல் ராசிக் என பிரசித்தி பெற்றுள்ளேன். இலங்கை தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை 2005 ஆம் ஆண்டு ஆரம்பித்து நாடு முழுவதும் 86 கிளைகளை உருவாக்கிக்கொண்டோம். முஸ்லிம் மக்களுக்கு அல்குர்ஆன் குறித்த தெளிவை ஏற்படுத்தி விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். அதுமட்டும் அல்லாது பல சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டோம். குறிப்பாக முஸ்லிம் இரத்ததானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்மால் உருவாக்கப்பட்டது. இஸ்லாம் இரத்ததானத்தை நியாயப்படுத்துவதை நாம் எடுத்துக்கூறியுள்ளோம். மத இன வேறுபாடுகள் இல்லாது இதனை நாம் செய்தோம். முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் உயரிய சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். எனினும் இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பில் ஏற்பட்ட சில மத நிருவாக முரண்பாடுகள் காரணமாக நாம் அதில் இருந்து வெளியேறி இலங்கை தௌஹீத் அமைப்பை உருவாக்கினோம்.
கேள்வி:- என்ன முரண்பாடுகள் ஏற்பட்டன?
பதில்:- முரண்பாடுகள் என்றால் பாதுகாப்பு குறித்த எந்த அச்சுறுத்தலான விடயங்கள் அல்ல. மத ரீதியிலும்இ நிருவாக ரீதியிலும் சில முரண்பாடுகள் ஏற்பட்டன. கொள்கைகள் பின்பற்றல்களில் மற்றும் குருபான் போன்ற மத செயற்பாடுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டன. நாம் திருக்குர்ஆன் வழியை மட்டுமே கட்டுப்பட்டு பின்பற்ற வேண்டும். அது அல்லாது எந்த தலைமைகளுக்கும் அல்ல என்பதே எமது நிலைப்பாடு.
கேள்வி :- கிழக்கில் மட்டுமா நீங்கள் இயங்குகின்றீர்கள்?
பதில் :- இல்லை நாடளாவிய ரீதியில் இயங்குகின்றோம். கிழக்கில் எமது அமைப்பின் கிளைகள் மிகவும் குறைவாகும். கிழக்கில் உள்ள மக்கள் தொகைக்கும் அமைய எமது அமைப்பின் செயற்பாடு குறைவானதாகும். ஏனைய பகுதிகளில் உள்ளன.
கேள்வி:- உங்களின் உண்மையான பெயர் என்ன?
பதில்:- ராசிக் ரபீட்தீன் இறைவனின் பெய ரில் ராபிக் என்ற அடையாளம் உள்ளது.
கேள்வி:- மன்சூர் என்ற பெயரில் நீங்கள் செயற்பட்டீர்களா?
பதில்:- இல்லை
கேள்வி:- இந்தியாவிலாவது?
பதில்:-இல்லை. அவ்வாறு ஒரு பெயர் எனக்கு இல்லை.
கேள்வி:- நீங்கள் ஏன் பெளத்த மதத்துக்கு எதிரான கீழ்த்தரமான வார்த்தைகளை பேசினீர்கள்?
பதில்:- உண்மையில் 2013ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள அடக்குமுறை ஏற்பட்டது. அதற்கு பதில் தெரிவிக்கும் போதே இவற்றை நான் கூறினேன் எனினும் நான் கூறியது முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை.
கேள்வி:- நீங்கள் கூறியது தவறு தானே?
பதில்:- ஆம். அந்த தவறை நான் ஏற்றுக்கொண்டேன். பிரசித்தியான முறையில் நான் எனது மன்னிப்பைக் கூறினேன். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாநாயக்க தேரர்களை சந்தித்து மன்னிப்புக் கேட்கவும் நான் முயற்சித்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஊடகங்களில் ஒரு காரணியை வைத்து மட்டுமே என்னை விமர்சித்தனர். ஒரு ஆண்டுக்கு பின்னர் எனக்கு வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றதிலும் நான் மன்னிப்புக்கோரினேன்.
கேள்வி:- இந்த மாதிரி வேறு பிரசாரங்கள் செய்தீர்கள் தானே?
பதில் :- இல்லை புத்தர் இறைச்சி உண்டார் என்று கூறினேன். அதைத் தவிர நான் வேறு ஒன்றும் கூறவில்லை.
கேள்வி:- வேறு மதங்களையும் இவ்வாறு விமர்சித்துள்ளீர்களா?
பதில்:- இல்லை பெளத்தத்தை பற்றி கூறவே தான் அதை கூறினேன். வேறு எந்த மதங்களையும் நான் விமர்சித்ததில்லை.
கேள்வி (ரவி கருணாநாயக்க):- ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை நீங்கள் நிராகரிக்கின்றீர்களா?
பதில்:- ஆம். பல தடவைகள் இதனை நான் எதிர்த்து கருத்துக்களைக் கூறியுள்ளேன். விடிவெள்ளி பத்திரிகையில் நான் இதனைத் தெளிவாகக் கூறினேன். இவர்கள் முஸ்லிம்கள் இல்லைஇ இவர்கள் இஸ்லாம் விரோத அமைப்புகள் என்றெல்லாம் கூறியுள்ளேன். நான் தொடர்ச்சியாக இந்த அமைப்பை நிராகரித்து பேசியுள்ளேன். 2018 ஆம் ஆண்டு இறுதிக்காலத்தில் கூட நான் ஐ.எஸ் அமைப்பை நிராகரித்து பேசினேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எனினும் இன்று ஐ.எஸ். அமைப்பை நான் ஆதரிக்கின்றேன் என என்மீது கூறும் விமர்சனங்களை நான் முற்றாக நிராகரிக்கிறேன்.
கேள்வி:- வஹாபிசம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில்:- வஹாபிசம் என்பது குறித்து யாருக்கும் உறுதியான தெளிவு இல்லை. இது அராபிய கொள்கை. இது குறித்து பல ஆதாரங்கள் உள்ளன. புத்தங்கள் உள்ளன. இலங்கையில்…
கேள்வி:- இல்லை. கேட்ட கேள்வி அதுவல்ல சரி இங்கு வஹாபிச பள்ளிகள் எத்தனை உள்ளன?
பதில்:- தௌஹீத் என்ற நபர்களை வஹாபிச வாதிகள் என கூறி அவர்களை அடிப்படைவாதிகள் என்றே கூறுகின்றனர். இது தவறான கருத்து. இலங்கையில் வகாப்பாதம் என்று கூறும் பயங்கரவாத அமைப்பு ஒன்றுமே இல்லை.
கேள்வி:- இங்கு ஏற்கனவே சாட்சிக்கு வந்தவர்கள் வகாபிசத்தை தவறான ஒன்றாக கூறுகின்றனரே?
பதில்:- அவர்கள் தவறான கருத்துக்களை கூறியுள்ளனர். வகாபிசம் என்பது எமது கொள்கை. நாம் எமது கொள்கையில் பல நல்ல காரணிகளைக் கூறியுள்ளோம். எமது நாட்டு கலாசாரத்துக்கு ஏற்ற முஸ்லிம் கொள்கையை நாம் வலியுறுத்துகின்றோம். எனினும் சிலர் இதனைத் தவறாக கூறி எம்மை எதிர்க்கின்றனர்.
கேள்வி:- யார் எதிர்த்தது?
பதில்:– உலமா சபை இதனைத் தவறாக கூறுகின்றது. முகத்தை மூட வேண்டும் என்றெல்லாம் உலமாதான் கூறுகின்றது. பெண்கள் முகத்தை மூட வேண்டாம், சாதாரண பெண்கள் முகத்தை மூட வேண்டாம் என்று நாம் கூறுவது தவறென கூறி அவர்கள் இறுக்கமான கோட்பாட்டை வலியுறுத்தி வருகின்றனர். முகமூடி அணிய பெண்களுக்கு அனுமதி இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. முகமூடி என்பது நபியின் மனைவிகளுக்கு மட்டுமே இருந்த ஒரு சட்டம்.
கேள்வி:- இவ்வாறு நன்றாகப் பேசும் நீங்கள் ஏன் அடிப்படைவாத கருத்துக்களை கூறுகின்றீர்கள்?
பதில்:- ஒரு தடவை நான் அந்த தவறை விட்டுவிட்டேன். எனது தவறை நான் திருத்திக்கொண்டு ஆரோக்கியமான நகர்வுகளுடன் முன்னகர்கின்றேன். நான் கூறி ஒரு மாதத்திலே அதனை நான் திருத்திக்கொண்டு மன்னிப்பும் கேட்டுக்கொண்டு என்னை திருத்திக்கொண்டேன்.
கேள்வி:- நீதிமன்ற வழக்கு இருந்ததே?
பதில்:- அது ஞானசார தேரருடன் ஏற்பட்ட ஒரு கருத்து முரண்பாடு கரணமாக சிக்கல் ஏற்பட்டது. தேரர் ஒருவரை அவன் என்று கூறியதே சிக்கலாக அமைந்தது.
கேள்வி:- நீங்கள் எங்கு மத கல்வியை கற்றீர்கள்?
பதில் :- நான் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மத கல்வியை படிக்கவில்லை. 12 வருடங்கள் குரானை மொழிபெயர்த்தேன். ஸாஹிரா வித்தியாலயம், கொழும்பு றோயல் கல்லூரி, களனி பல்கலைகழகத்தில் கல்வி கற்றேன்.
கேள்வி:- இலங்கையில் மத தலைமைகள் உள்ளதை அறிந்துள்ளீர்களா?
பதில் :-ஆம்
கேள்வி :- அதில் நீங்கள் இணைந்து செயற்பட்டுள்ளீர்களா?
பதில் :- இல்லை நான் அதில் இணைந்திருந்தால் நானும் ஹலால் கொள்கை போன்ற இறுக்கமான கொள்கையில் இருக்க வேண்டி வரும். ஆகவே நான் இணையவில்லை. இது மத பிரச்சினை. இதில் நான் கலந்துகொள்ளவில்லை.
கேள்வி:- ஏனைய அமைப்புகள் உலமாவுடன் இணைந்துள்ளன நீங்கள் மட்டும் தானே இல்லை?
பதில்:- எமது எல்லைக்குள் இருந்து நாம் செயற்பட்டு வருகின்றோம். தேவைப்படும் நேரங்களில் சில விடயங்களில் உலமாக்களை தொடர்புகொள்வோம்.
கேள்வி :- அங்கீகாரம் இல்லாத மத கற்கை களை பெற்று உங்களின் நினைப்பிற்கு அமைய மத பிரசாரம் செய்வது சரியா ?
பதில்:- ஆம் உண்மைதான், எனக்கு தெளிவு உள்ளது. அவற்றை நான் அறிந்து தெரியப்படுத்துகின்றேன்.
கேள்வி :- உங்களுக்கு தெளிவு உள்ளது. ஆகவே இதனை மற்றவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றீர்கள் அப்படியா?
பதில்:- இல்லை எனக்கு சாட்சியங்கள் தெளிவு உள்ளன.
கேள்வி:- அரபு மொழியை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமா?
பதில் :- ஆம், பௌத்தம் எவ்வாறு பாளி மொழியில் உள்ளதோ அதேபோல் எமது அடிப்படைகளை அரபி மூலமே கொண்டு செல்ல வேண்டும். எம்மால் அரபி மொழியை நிராகரிக்க முடியாது. உலகின் இரண்டாவது பிரதான மொழியாக அரபி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அரபி மொழி உள்ளது. அப்படி இருக்கையில் ஏன் பின்பற்றக் கூடாது
கேள்வி:- ஆங்கிலம் இங்கு போதாதா அரபியும் வேண்டுமா?
பதில்:- நான் அவ்வாறு கூறவில்லை. எமது பிரதான மொழி எமது மத அனுஷ்டானங்கள், வழிபாடுகள் அனைத்தும் அரபி மொழியில் தான் கூறுகின்றோம்.
கேள்வி :-அதற்காக இங்கு அரபி வேண்டும் என்று கூறுவது தவறு. பதாகைகள் வைத்து இதனை செய்ய வேண்டுமா?
பதில் :- நான் அதைத்தான் கூறுகின்றேன். அரபி கலாசாரம் ஒன்று இங்கு வரவேண்டும் என நாம் கூறவில்லை. அரபி பின்பற்றல் இங்கு வேண்டாம் என்று உறுதியான நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். நபிகள் நாயகம் அரபிக் கலாசாரத்தை தான் பின்பற்ற வேண்டும் என கூறவில்லை. நாம் இங்குள்ள முறைமைகளை பின்பற்றலாம்.
கேள்வி:- பெண்களின் திருமண வயது குறித்து பேசியது குறித்து உங்களின் கருத்து என்ன ?
பதில் :- நான் கூறியதை முழுமையாக எவரும் கேட்கவில்லை. வயது எல்லை பற்றி நாம் கூறவில்லை. 18 வயது என்பதை நான் நிராகரிக்கவில்லை. பொது திருமண சட்டத்தில் 12 வயது அடிப்படை வயது என்று உள்ளது. ஆனால் சில விசேட காரணிகள் அமைய அவர்களின் அங்கீகாரத்திற்கு அமைய மாற்றிக்கொள்ள முடியும்.
கேள்வி :- நீங்கள் கூறுவதை கூறிவிட்டு மன்னிப்பு கேட்பது ஏன்?
பதில் :-நான் அவ்வாறு அல்ல. எனது கதை யை நீங்கள் யாரும் முழுமையாக கேட்கவில்லை. திருமண வயது குறித்து ஒரு உறுதியான திட்டம் வேண்டும். யாரும் நினைத்த நேரத்தில் மாற்ற வேண்டாம். 18 வயது நல்லது. அதைவிட குறைந்த வயதில் தேவை ஏற்பட்டால் விசேட செயற்பாடுகளை கருத்தில் கொண்டு திருமணம் செய்து வைக்க முடியும் என்றே கூறினேன்.
கேள்வி:- ஒரு சிறுவன் ஒரு பதாகையை ஏந்திக் கொண்டு அதில் சிறு வயதை திருமணத்தை வலியுறுத்தும் புகைப்படம் உள்ளது. இதன்மூலம் சிறுவர்களை இள வயது திருமணத்திற்கு வலியுறுத்துவதாகவே உள்ளதே?
பதில்:- நாம் சிறுவர்களை வைத்து பதாகையை ஏந்த கூறவில்லை பெண்களை நாம் சமமாக மதிக்கிறோம். எமது போராட்டங்களில் முஸ்லிம்கள் வருவார்கள் குடும்பமாக வரும்போது அதில் சிறுவர்களும் வருகின்றனர். அவ்வாறு ஏற்பட்ட ஒன்றே இந்த படங்களில் உள்ளது.
கேள்வி :- இதன் பின்னணியில் யாரும் உள்ளனரா?
பதில்:-யாரும் இல்லை கோத்தபாய ராஜபக்ஷ கூட பின்னணியில் இல்லை.
கேள்வி:- இப்போது நீங்கள் ஏன் அவரது பெயரைக் கூறினீர்கள்? கேள்வி கேட்க முன்னரே நீங்கள் ஏன் தடுமாறுகின்றீர்கள்?
பதில்:- இல்லை, எப்போதும் என்னுடன் அவரைத் தொடர்புபடுத்தி பேசுவது வழக் கம். அதுதான் கூறினேன். இந்த கேள்வி வரும் என்று தெரியும்.
கேள்வி:- உங்களுக்கு நிதி எவ்வாறு வருகின்றது?
பதில்:- அரச சார்பற்ற நிறுவனங்களில் இருந்து நான் உதவிகளை பெற்றுக்கொள்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு தொழில் இல்லாத நேரங்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கூட உதவி பெற்றுக்கொண்டேன். அவர் வழங்கிய கடிதமும் என்னிடம் உள்ளது.
கேள்வி:- இல்லை நான் கேட்ட கேள்விக்கு பதில்?
பதில்:- எனக்கு யாரிடமும் இருந்து பணம் வந்தது நான் எவ்வாறு இந்த பணங்களை செலவழித்தேன் என்ற சகல ஆதாரமும் கணக்கு வழக்கும் உள்ளன. நாம் முஸ்லிம் மக்களுக்காக சேவை செய்கின்றோம். சதகா சகப் என்ற புண்ணிய கோட்பாடுகள் எமது மதத்தில் உள்ளன. அதற்கு அமைய நாம் சேவை செய்கின்றோம். எனது வங்கிக் கணக்கு எமது அமைப்பின் வங்கிக் கணக்கு உள்ளது தேடிப்பார்த்தால் தெரியும்.
கேள்வி:- கோத்தபாயவின் பெயரை ஏன் கூறினீர்கள்?
பதில்:- என்னை அவரின் அடியாள் என்று கூற சிலருக்கு தேவை இருந்தது. அதனை நிராகரிக்க வேண்டிய தேவை இருந்தது
கேள்வி :-பி.ஜே. என்பவரை தெரியுமா ?
பதில்:- ஆம் அவர் ஒரு பிரசித்தி பெற்ற மதத் தலைவர்
கேள்வி:- அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுத்தீர்களா?
பதில் :-ஆம், ஆனால் அவரை பயங்கரவாதியாக கூற முயற்சிக்கின்றனர்.
கேள்வி:- அவர் இங்கு வருவதற்கு எதிர்ப்பு இருந்தது தெரியுமா?
பதில் :-அது ஒரு அரசியல்வாதியின் நோக்கம் மட்டுமேயாகும். அவர் முஸ்லிம் எதிர்ப்புவாதி அல்ல. அசாத் சாலி மட்டும் எப்போதுமே எமக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார். நாம் பி.ஜே. வை வரவழைக்க முயற்சிகள் எடுத்த போதெல்லாம் அசாத்சாலி அவற்றை தடுத்தார். இதற்கு எதிராக நாம் வழக்கும் தொடுத்தோம்.
கேள்வி:- நீங்கள் என்ன கூறினாலும் இவர் குறித்து அரசாங்கம் அச்சப்படுகின்றது புலனாய்வு எச்சரிக்கிறது என்றால் அவர் தடுக்க வேண்டியது கடமை தானே. இவர் ஆரம்பத் தில் கூட முரண்பட்ட கருத்துக்களை கூறி குழப்பங்களை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இது தெரியுமா?
பதில்:- இது வேறு அரசியல் தலையீடு தான். இந்தியாவில் ஏழு இலட்சம் மக்கள் ஆதரவை கொண்ட ஒருவருக்கு எப்படி அவ்வாறு கூறுவது.
கேள்வி:- உங்களுக்கு சரி என்று நினைப்பதை பேச முடியும் ஆனால் இன்னொரு மதத்திற்கு பிரச்சினையாக அது அமையலாம் தானே ?
பதில்:- நான் தூண்டதக்கதாக கருத்துகளை ஒருபோதும் பேசியதில்லை.
கேள்வி :-நீங்கள் கூறுவது சரி ஏனையவர்கள் கூறுவது பிழை அப்படியா?
பதில் :- ஒன்று சரியென்றால் இன்னொன்று பிழையாக இருக்க வேண்டும். ஆனால் எமது கொள்கையை பின்பற்றுங்கள் என வலியுறுத்தவில்லை. நாம் சரியென நினைக்கிறோம். இது மத தர்மம்.
கேள்வி:- “பக்தாதியின் கருத்துக்களை ஏற்றுகொண்ட ராசிக் ஒரு பயங்கரவாதி” என அசாத் சாலி கூறினார், இது குறித்து உங்களின் கருத்து என்ன?
பதில் :-இது முற்றிலும் பொய்யானது. இந்த அமைப்புகள் குறித்து என்னிடம் கேட்ட ஒரு கேள்விக்கு நான் பதில் தெரிவித்தேன். இவர்கள் இஸ்லாம் என்று கூறிக்கொண்டுள்ளனர். பயங்கரவாதம் தான் இவர்களின் இலக்காக உள்ளது. இவர்கள் இஸ்லாம் பற்றி பேசுகின்ற போது இவர்கள் தான் சரி என உடல் புல்லரிக்கும். முதலில் இவர்கள் மனங்களை வெற்றிகொள்ள பேசுவார்கள். ஆனால் இறுதியாக பயங்கரவாதத்தில் தான் முடியும் என்றேன்.
கேள்வி:- முடிகள் சிலிர்க்கும் என்று கூறியது ஏன்?
பதில்:- இல்லை அவர் கூறிய ஒரு உரை யை கேட்கும்போது முடிகள் சிலிர்க்கும் ஆனால் இறுதியாகக் தீவிரவாதமாக அமையும் என்றே கூறினேன்.
கேள்வி:- பயங்கரவாதம் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- ஜிஹாத் என்பதில் எமது நிலைப்பாடு வேறு. ஆயுதம் ஏந்தி போராடுவது ஜிஹாத் அல்ல. அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்நிய மக்களை கொள்வது ஜிஹாத் அல்ல.
கேள்வி:- உங்களின் கொள்கையை கூறுங்கள் சஹ்ரானின் பின்னர் தௌஹீத் என்றால் அச்சமாக உள்ளது. ஆகவே சிங்கள மக்கள் மத்தியில் குழப்பம் உள்ளது ?
பதில்:- அனைத்து முஸ்லிம்களும் தௌ ஹீத் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கடவுள் என்பதே அதுவாகும். தெளிவான முஸ்லிம் தெளிவு ஒன்று இருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு ஒவ்வாத பல கலாசாரங்கள் எமக்குள் வந்தன. சிலை மந்திர தந்திரம் என அனைத்தும் வந்தன. நான் ஏனைய மதங்களைக் கூறவில்லை ஆனால் முஸ்லிம்கள் அவற்றை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். திருக்குர்ஆன் பற்றி ஏனைய மதத்தவருக்கு தெளிவு இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர்கள் தவறான எண்ணக்கருத்தை கொள்வார்கள். எனவே முஸ்லிம் இல்லாத ஒருவரும் முஸ்லிம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இதில் முரண்பாடுகள் வரக்கூடாது என்பதற்காக நாம் இலகுவாக இவற்றை செய்கின்றோம். முஸ்லிம் இல்லாதவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது எனக் கூறுவது தவறு அவர்களும் வர வேண்டும் என்று கூறுவது நாம் தான். பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறுவது நாம் தான். இவற்றை எல்லாம் கூறும் போது எம்மை தவறாகக் கூறுகின்றனர்.
கேள்வி:- நீங்கள் ஆக்ரோசமாக பேசுவது இளைஞர்களைத் தூண்டிவிடும் தானே?
பதில்:- நான் எங்கேயும் ஆக்ரோசமாக மக்களைத் தூண்டும் பிரசாரங்களை செய்யவில்லை.
கேள்வி:- சஹ்ரானுடன் நீங்கள் இருந்தீர்களா?
பதில்:- இல்லை எப்போதும் எங்களுடன் இருந்ததில்லை. சிலர் பொய்யான கருத்துக்களை கூறுகின்றனர். அவர் எம்முடன் இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
கேள்வி:- நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதும் இல்லையா?
பதில்:- இல்லை. சந்தித்ததும் இல்லை பேச்சுவார்த்தை நடத்தியதும் இல்லை. எமக்கும் அவருக்கும் இடையில் கொள்கை ரீதியில் முரண்பாடு உள்ளது. நோன்பு விடயங்கள் பெண்கள் குறித்த கோட்பாடுகள் ஜிஹாத் குறித்த கோட்பாடுகளில் எமக்கும் அவருக்கும் இடையில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. அவர்கள் பொதுமக்களை மற்றும் மக்களை கொல்லவேண்டும் என்ற கொள்கையில் இருந்தவர். முஸ்லிம் இல்லாதவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று குர்ஆன் ஒருபோதும் கோரவில்லை. ஒருபோதும் அதற்கு அங்கீகாரம் இல்லை. இவற்றை எல்லாம் நாம் எடுத்துக்கூறிய போது முரண்பட்டார்.
கேள்வி:- அவர் இல்லாவிட்டாலும் வேறு எவராவது உங்களுடன் இருக்கவில்லையா?
பதில்:- ஹச்தூன் என்ற நபர் மட்டும் இருந்தார். 2015இல் வந்தார். அவரது காதலியை கூட்டிவந்து முஸ்லிம் மதத்திற்கு மாற்றினார். பின்னர் சில தொடர்புகள் இருந்தன. குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. அவள் ஒரு இந்துப் பெண். அவளது விருப்பத்தின் பெயரில் இஸ்லாத்துக்கு வந்தார். நாம் தான் மாற்றினோம். எனினும் வீட்டில் முரண்பாடுகள் இருந்தன. ஹச்தூன் என்பவருடன் வந்தே அவரை திருமணம் செய்யவேண்டும் என்று கூறினார். எனினும் வீட்டில் பிரச்சினை இருந்தது. பின்னர் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டது. முஸ்லிமை விட்டும் விலகியதாக கூறி கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
கேள்வி:- நீங்கள் கூறும் கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதே?
பதில்:- கொள்கைகளை பின்பற்றும் வழி யில் முரண்பாடுகள் வரும். எம்மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்திய நபர்கள் எம்முடன் நன்றாக பழகுகின்றனர். நாம் இனவாதத்தை பரப்பவில்லை. நாம் கூறும் கருத்துக்களை ஊடகங்கள் தவறாக முன்வைத்து எம்மைத் தவறாக சித்திரிக்கின்றன.
கேள்வி:- சஹ்ரானை அனைத்து முஸ்லிம்களும் அறிந்திருந்தனர் என்று கூறியது ஏன்?
பதில்:- தவ்ஹீத் கருத்தில் சஹ்ரான் பிரசித்தியானவர். அதனால் தெரியும் என்று கூறினேன்.
கேள்வி :- இல்லை நீங்கள் அவ்வாறு கூறியது ஏன்?
பதில் :- கேட்கும் அனைத்தும் தலைவர்க ளும் சஹ்ரானை தெரியும் என்று கூறினார் கள். அரசியல்வாதிகள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துள்ளார். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் அல்ல பெரும்பாலும் தெரியும் என்று அர்த்தம்.
கேள்வி:- சஹ்ரான் நல்ல பேச்சாளர் என?
பதில்: -ஆம்,
கேள்வி:- ஐ.எஸ். அமைப்பின் கொடி தெரியுமா?
பதில்:- ஆம்இ அது சாதாரணமாகத் தெரிந்த ஒன்றுதானே.
கேள்வி :- வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டம் நடந்தது அதில் ஐ.எஸ். கொடியுடன் வந்ததெல்லாம் நடந்துள்ளது. இது குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
பதில்:- இல்லை, எமக்கு ஆரம்பத்தில் இது தெரியவில்லை. அப்போதே தெரிந்திருந் தால் நாம் அபோதே இதற்கு எதிராக நட வடிக்கை எடுத்திருப்போம்.
கேள்வி :- உங்களுக்கு அனைத்தும் தெரிந்துள்ளது, மத பிரிவுகள் குறித்து பேசுகின்றீர்கள்இ இந்த சம்பவம் தெரியவில்லையா? நீங்கள் கூறுவதில் எனக்கு சந்தேகம் உள்ளது?
பதில்:- உண்மையில் நான் அறிந்திருக்கவில்லை, தெரிந்திருந்தால் நான் அப்போதே எதிர்ப்பை தெரிவித்திருப்பேன். நான் அறிந்திருக்கவில்லை.
கேள்வி:- நீங்கள் எங்களை விடவும் நன் றாக சிங்களம் பேசுகின்றீர்கள் ஆனால் நீங் கள் புத்தரை விமர்சித்தமை குறித்து பேசிய கருத்துகளை பார்க்கும் போது உங்களை நம்ப முடியாது உள்ளது. நீங்கள் இவ்வளவு அறிவுள்ள ஒருவராக இருந்தும் உங்களின் மனதில் வரும் கருத்துகள் அவை.
பதில்: -நான் பதில் கூறவா ?
கேள்வி:- நீங்கள் கூறுவீர்கள் தான். ஆனால் நம்ப முடியாது நாம் குடித்துவிட்டு கூட நபிகளை இயேசுவை விமர்சிக்கமாட் டோம். நீங்கள் ஏன் புத்தரை கீழ்த்தரமாகப் பேசினீர்கள். இதில் தான் சந்தேகம் உள்ளது.
பதில்:- நான் அவரை இழிவுபடுத்த நினைக்கவில்லை. ஒரு காரணியை நியாயப்படுத்த நான் அவ்வாறு கூறினேன். இதற்கு மேல் நான் எவ்வாறு என்னை நியாயப்படுத்துவது. அப்போது நான் கூறியது சரி என்றே இருந்தேன். பின்னர் நான் ஆராய்ந்தே எனது தவறை திருத்திக்கொண்டேன்.
கேள்வி :- டென்மார்க் நாட்டில் நபிகளுக்கு எதிராக காட்டூன் வரைந்தனர். இதனை அடுத்து பாரிய சிக்கல் வந்தது. முஸ்லிம் சமயம் போலவே ஏனைய சமூகத்தை விமர்சிக்க நீங்கள் முன்வந்தபோது அதன் விளைவுகளை நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும்.
பதில்:- ஆம், நான் செய்த தவறை திருத்திக்கொண்டு முன்னகரவே நினைகின்றேன்.
குழு:- நீங்கள் போதகராக ஒரு கருத்துக்கள் தெரியாது போதிக்க வேண்டாம். உங்களின் போதனைகளை நிறுத்துங்கள்;
பதில்:- நான் 19 ஆண்டுகள் போதனை செய்துள்ளேன்.
கேள்வி:- நீங்கள் மதத் தலைவரா?
பதில்:- இல்லை, மதம் கற்பிக்கும் பிரசாரி
கேள்வி:- நீங்கள் பிரசாரம் செய்யும் போது மக்களை உங்கள் பக்கம் மாற்றுகின்றீர்களா?
பதில்:- அப்படி இல்லை, என்னை பின்பற் றும் நபர்கள் வரலாம்.
கேள்வி:- உங்களின் பிரசாரங்களில் மாற்று மதத்தவர் உங்களை சார்ந்துள்ளனரா?
பதில்:- இல்லை எனது கருத்துக்களை கேட்டு மாற்று மதத்தவர் யாரும் இணைய வில்லை
கேள்வி:-மக்கள் எண்ணிக்கையை கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த் தம்?
பதில்:- எமது மக்கள் தொகை கூடியுள்ளது, கல்வி கீழ் மட்டத்தில் உள்ளது. பல பிரச் சினைகள் உள்ளன. எமது சமூகத்தை சரி யான பக்கம் கொண்டுசெல்ல தேவை உள்ளது. அதனையே நான் அவ்வாறு கூறினேன்.
கேள்வி:- உங்களின் அமைப்பு அடிப்படை வாதமானதா ?
பதில்:- இல்லை அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இல்லை
கேள்வி:- 18வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்:- ஆம், ஆனால்……
குழு:- ஆனால் அல்ல நீங்கள் எப்போதுமே உங்களின் கருத்துக்களில் இருந்து நழுவிக்கொள்கின்றீர்கள்.
0 comments :
Post a Comment