Saturday, June 29, 2019

கோத்தாவிற்கு எதிரான முறைப்பாடுகளை நிராகரிக்க கோரி அவரது வழங்கறிஞர் மனுத்தாக்கல்.

கலிபோனிய நீதிமன்றில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குகளை நிராகரிக்குமாறு கோரி அவரது வழங்கறிஞர் ஜோன் உலின் கலிபோனிய நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

இலங்கையில் இருந்தபோது பாலியல் தொல்லை உட்பட்ட பல்வேறு தொந்தரவுகளுக்கு தாம் உட்பட்டதாக கூறி 8 தமிழர்களும் 2 சிங்களவர்களும் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வழக்கின் பின்னணியில் ஐ.நா வின் முக்கிய பதவி ஒன்றிலிருந்த யஸ்மின் சூசா என்ற பெண் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாய எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவர் போட்டியிடுவதை தடுத்து தங்களுக்கு தேவையான ஒருவரை கதிரையில் அமர்த்துவதற்கான சூழ்ச்சியின் ஒருபகுதியாகவே இவ்விடயம் அறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment