மரண தண்டமை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி – நீதி அமைச்சு முரண்படுகின்றதா?
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கான மரண தண்டனையை நிறைவேற்ற தான் குறித்த ஆவணங்களில் கையொப்பம் இட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்ட ஆணை எதுவும், நீதியமைச்சுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று நீதியமைச்சின் செயலர் ஆர்எம்டிபி மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதியினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளபோதும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு இன்னமும் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, தூக்கில் போடுபவர் பணிக்கு இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் பிரதானி பாக்கியசோதி சரவணமுத்து உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment