Monday, June 10, 2019

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு ரத்தன தேரர் ஆப்பு. இராணுவ பல்கலைகழகமாக்க முன்மொழிவு.

புனானை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்தினை இராணுவத்தினருக்கு அவசியமான தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உயர் கல்விகளை வழங்க பயன்படுத்தவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஆராபிய மொழி மற்றும் இஸ்லாமிய தர்மத்தை போதிப்பதென்ற போர்வையில் குறித்த பல்கலைக்கழகத்தினூடாக முழு இலங்கையையும் இஸ்லாமிய இராச்சியமாக மாற்றுவதே இலக்காக இருந்துள்ளது. இவர்கள் ஆயுதங்களை பயன்படுத்துவற்கு பதிலாக ஓர் நுண்ணியல் யுத்தத்தை ஆராம்பித்துள்ளார்கள்.

எனவே இப்பல்கலைக்கழகத்தில் நாம் எமது படையினருக்கு தேவையான படையியல் தொழில்நுட்பங்களையும் இணைய உயர் கல்வியினையும் வழங்கும் பல்கலைக்கழகமாக இதனை பயன்படுத்தவேண்டும். 50% தினை இராணுவத்தின் தேவைக்காகவும் மிகுதியை அனைத்து இனங்களையும் சேர்ந்த இலங்கை மாணவர்கள் பயனடையக்கூடிய பல்கலைக்கழகமாகவும் மாற்றியமைக்கவேண்டும் என்ற முன்மொழிவை நான் செய்கின்றேன் என்று ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான சட்ட ரீதியான முன்மொழிவை தனிநபர் கோரிக்கையாகவோ அன்றில் குழுவாகவோ பாராமன்றில் சமர்ப்பிப்பதற்கு தயாராக இருக்கின்றோம். அது தொடர்பான ஆவணங்களை எதிர்வரும் 10 தினங்களில் சமர்பிக்கவுள்ளோம் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment