தமிழரசுக் கட்சியின் மாநாட்டு வாசலில் அரசியல் அடியாட்கள் மதுபோதையில் முட்டிமோதினர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 வது தேசிய மாநாடு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் அங்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்று கூறப்படும் அரசியல் ஏவலாளிகளுக்கும் தமிழரசுக்கட்சியின் மதுபோதையில் நின்ற அடியாட்களுக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனக் கூறிக்கொள்ளும் குறித்த ஆட்கள் தமிழரசுக் கட்சியின் மாநாட்டு மண்டபத்தை நெருங்க முற்பட்டபோது, அம்மாநாட்டுக்கு காவலாக பொலிஸாருடன் மதுபோதையில் நின்ற கட்சியின் அடியாட்களை அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், குறிந்த நபர்கள் அரசியல்வாதிகளின் எடுபிடிகள் என்றும் குற்றஞ்சுமத்தினர்.
எது எவ்வாறாயினும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் அலையும் குறித்த கூட்டத்தினர் அரசியல் கட்சி ஒன்றின் அடியாட்களாகவே செயற்படுகின்றார்கள் என்பது அவர்கள் சுமந்துவந்த பதாதைகள் மற்றும் அவர்கள் எழுப்பிய கோஷங்களிலிருந்து தெளிவாக புலனாகின்றது. அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கோரும் பாதாதைகளுக்கு பதிலாக அரசியல் கோஷங்கள் தாங்கிய சுலோகங்களையே சுமந்து வந்தனர். அத்துடன் அவர்கள் எழுப்பிய கோஷங்களும் அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருந்தது.
இவர்கள் புலம்பெயர் புலிகளின் பணத்தில் இயங்கும் கஜேந்திர குமாரின் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படுகின்றார்கள் என்பது வெளிப்படையான குற்றச்சாட்டாகும்.
இப்படங்கள் குறித்த நபர்கள் அரசியல் நாடகம் ஒன்றுக்காக நன்கு பயிற்றப்பட்ட நடிகர்கள் என்பதை வெளிகாட்டுகின்றது.
0 comments :
Post a Comment