Monday, June 17, 2019

வல்லிபுரம் வதைமுகாமின் கொலையாளிகள் அடுத்தவாரம் நீதிமன்றில்.

சீறோ வண் என்று அழைக்கப்பட்ட வல்லிபுரம் வதைமுகாமில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் சந்தேச நபர்கள் மீதான விசாரணைகள் அடுத்தவாரம் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

மேற்படி வதைமுகாமில் யுத்தக்கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த படைகளைச் சேர்ந்த சிலரை புலிகள் தோல்வியை தழுவி முள்ளிவாய்கால் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது கொலை செய்துள்ளனர்.

யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் இக்கொலைகள் தொடர்பாக சரணடைந்திருந்த புலிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது வல்லிபுரம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் கொல்லப்பட்டு விட்டமையை வெளிச்சத்திற்கு வந்ததுடன் கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் கொலையாளிகளை இனம் கண்டு கொண்டுள்ளனர். அவ்வாறானவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் வாரங்களில் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான போதிய அதாரங்கள் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது.

அரசியல் கைதிகள் என்று கூறப்படுவோரில் மேற்படி கொலைகாரரும் அடங்குகின்றனர். சிறைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தவர்களை கொலை செய்து யுத்த தர்மத்தை மீறியவர்கள் தண்டனைக்குரியவர்களாவர். அத்துடன் குறித்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் எதிராளிகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேற்படி பயங்கரவாதிகளின் விடுதலை தொடர்பாக கூக்குரலிடும் அரசியல்வாதிகள் இதுவரை குறித்த முகாமில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பில் அக்கறை செலுத்தாமை கண்டனத்திற்குரியதாகும்.

24.11.2010 அன்று நீதிமன்ற உத்தரவின்பேரில் முல்லைத்தீவு, பரந்தன் வீதியில் 9 கி. மீ. தூரத்தில் புதுக்குடியிருப்பு வல்லிபுரம் என்ற இடத்தில் (காட்டுப் பகுதியில்) இந்தப் புதை குழி தோண்டப்பட்டது. இந்தப் புதை குழியைத் தோண்டுவதற்கென 100 பேர் கொண்ட குழுவொன்று அங்கு சென்றிருந்தது. இக்குழுவில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல், மருத்துவ விசாரணை அதிகாரிகள் , அரச பகுப்பாய்வு அதிகாரிகள் , நில அளவை திணைக்கள அதிகாரிகள் , பல்கலைக்கழக விசேட விரிவுரையாளர்கள் என பலபேர் அடங்கினர்.

இதன்போது 26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டது. இப்புதைகுழி தொடர்பான தகவலை தடுப்புக் காவலிலிருந்த முன்னாள் புலி உறுப்பினரொருவர் வழங்கினார் என்பதும் அவரே புதைகுழியை இனம்காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'சீறோ வன்பேஸ்' என்ற பெயரில் செயற்பட்டு வந்துள்ள இவ்வதைமுகாமில் புலிகளுக்கு எதிரானவர்களையும், பிடிக்கப்படும் படை வீரர்களையும் சித்திரவதை செய்து கொன்றுள்ளமை சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் ஊடாக வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட ஐ. பி. ஜெயரட்ணமும் இங்கு தான் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.


No comments:

Post a Comment