Tuesday, June 11, 2019

வாராந்த அமைச்சரவை சந்திப்பு ரத்து! தொடங்கி விட்டாரா மைத்திரி ஆட்டத்தை?

அமைச்சரவைக் கூட்டம் வாராந்தம் செவ்வாயக்கிழமைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இன்று இடம்பெறவிருந்த அமைச்சரவை சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் சிலர் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

கடந்த 7ம் திகதி அவசரமாக அமைச்சரவையை கூட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 21.04 தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பாராளுமன்றினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் தான் எதிர்வரும் காலங்களில் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்குபற்ற மாட்டேன் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இன்று குறித்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறாயின் அமைச்சரவைக்கும் அதன் தலைவரான ஜனாதிபதிக்குமிடையேயான முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளமை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment