ஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் நெருப்பு வைக்கின்றார். தம்பர அமில தேரர்.
நாடு ஆபத்தில் வீழ்ந்துள்ள இந்நிலையில் நாட்டின் ஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் தீமுட்டிக்கொண்டு செல்வதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்வாறு குறிப்பிட்ட தேரர், ஜனாதிபதி தான் பதவியிலிருந்து செல்வதற்கு முன்னர் அவ்வாறு தீ வைத்து நாசம் செய்துவிட்டே செல்வேன் என தெரிவித்துள்ளதாக தான் கேள்வியுற்றதாகவும் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அவரை விரட்டுவதுடன் நின்றுவிடாது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரினார். தெரிவுக்குழு முன்னர் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் , பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய புனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோர் வழங்கியுள்ள சாட்சிகளின் அடிப்படையில் 270 உயிர்கள் பலியாகியுள்ளமைக்கு பிரதான பொறுப்பாளி ஜனாதிபதியே என்பது தெளிவாகியுள்ளது.
இந்நிலையில் நாம் கார்தினல் மல்கம் ரஞ்சித் அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கின்றோம். உங்களது பக்தர்கள் இவ்வாறு கொல்லப்பட்டமை தொடர்பில் நீங்கள் தற்போது யாது கூறுகின்றீர்கள். இவர்களது செயற்பாட்டில்தானே இன்று இஸ்லாமிய மக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே வெறுப்பு ஏற்பட்டிருக்கின்றது.
0 comments :
Post a Comment