அத்துரலிய ரத்தின தேரரின் உயிரைக் காப்பாற்றக் கோருகின்றார் மறவன்புலவு சச்சிதானந்தன்.
ஹிஸ்புல்லா , றிசார்ட் பதுயுதீன் உட்பட்ட அடிப்படைவாதிகளை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவரும், அத்துரலிய ரத்தன தேரரின் உயிரை காப்பாற்றுமாறு சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் வேண்டுதல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அவரைக் காப்பாற்றுக.
இலங்கை சிவபூமி. திருமூலர் அன்றே கூறினார். புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள் புத்த விகாரைகளில் சிவனுக்கும் இடமுண்டு சைவக் கடவுளருக்கும் இடம் உண்டு.
400 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைகுள் வலிந்து புகுந்த கிருத்தவ மதம் சைவர்களையும் புத்தர்களையும் ஏளனம் செய்தது சைவக் கோயில்களும் புத்த விகாரங்களும் சாத்தானின் இருப்பிடங்கள் என வலிந்து கூறினர். பீரங்கி முனையில், துப்பாக்கி முனையில், வாள் முனையில் சைவர்களையும் புத்தர்களையும் கிறித்தவர்கள் ஆக்கினர்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரோடு புகுந்த முகமதியர்கள் தொடக்கத்தில் இந்த மண்ணின் மரபுகளை மதித்து உள் புகுந்தனர். படிப்படியாக மண்ணின் மரபுகளை இழித்துப் பேச தொடங்கினர். அண்மைக்காலங்களில் மிதித்து நடக்க முற்படுகின்றனர்.
சிவ பூமியில் இருந்த காளி கோயிலை அகற்றினேன், அந்த இடத்தில் முகமதியர் வழிபாட்டிடம் கட்டினேன், மசூதி கட்டினேன், அதற்காக அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தினேன் என்ற பொருள்பட இன்றைய கிழக்கு மாகாண ஆளுநர் இசுபுல்லர் கூறிய சொற்கள் அவர் இலங்கை அரசில் எந்தப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவர் என்பதையே எடுத்துக் காட்டின.
முசலிப் பிரிவில் சிவபூமிக்குள்ளே அடாத்தாகக் காடுகளை வெட்டி ஆயிரத்துக்கும் அதிகமான முகமதியரைக் குடியேற்றியவர் இரிசாத்தர் பதியுதீன்.
முல்லைத்தீவில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக் கையகப்படுத்தி அங்கு முகமதியரைக் குடியேற்ற இரிசாத்தர் பதியுதீன் முனைந்த பொழுது வடமாகாண சபை தலையிட்டுத் தடுத்தது.
சிவபூமியில் மாட்டிறைச்சிக்கடை கூடாது எனச் சைவர்கள் களம் இறங்கிய பொழுது, உள்ளுராட்சி அமைப்புக்கள் தீர்மானங்கள் இயற்றிய பொழுது, உள்ளூராட்சித் தலைவர்களை மிரட்டியவர் இரிசாத்தர் பதியுதீன்.
இசுபுல்லரும் இரிசாத்தர் பதியுதீனும் அரசுப் பதவிகளில் இருப்பதால் சைவர்களுக்கு வேண்டாததைச் செய்கிறார்கள் என்ற முறைப்பாடு வடக்கே கிழக்கே மலையகத்திலே நெடுங் காலமாக உண்டு.
கிழக்கு மாகாணச் சைவத் தமிழர்கள் ஒன்றிணைந்து இசுபுல்லர் பதவி விலக வேண்டும் என ஒரு நாள் முழுவதும் கடையடைப்பு நிகழ்த்தியதை மறக்கமுடியாது.
கண்டியில் தலதா மாளிகையில் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் காலவரையற்ற உண்ணா நோன்பு இருக்கிறார்.
சைவத் தமிழர்களாகிய நாங்கள் எதை இந்நாள்வரை கோரிக்கையாக வைத்திருந்தோமோ அதையே புத்தத் தேசியவாதியான வணக்கத்துக்குரிய தேரரும் வைத்திருக்கிறார், களத்தில் இறங்கி போராடுகிறார்.
வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தன தேரர் பெருமானின் கோரிக்கைகளில் நியாயம் உண்டு. நீதி உண்டு.
இலங்கை அரசு செவி சாய்க்க வேண்டும். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி இலங்கைத்தீவின் மண்ணின் மரபுகள் பேணுவோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
வணக்கத்துக்குரிய தேரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுத்தால் இலங்கையைச் சிவபூமியாக கொண்டு வாழ்கின்ற சைவத் தமிழர்கள் இலங்கை அரசைப் பாராட்டுவார்கள்.
வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் அவர்களும் அவரது அருமைத் தொண்டர்களும் புத்த தேசியத்தை முன்னெடுத்து மண்ணின் மரபைப் பேண விழைகிறார்கள்.
இந்த வரலாற்று முயற்சியில் பௌத்த சிங்கள மக்களுக்கு உறுதுணையாக இந்த மண்ணின் மரபுகளைப் பாதுகாத்துப் பேணிக் காக்க விரும்புகின்ற சைவத் தமிழர்கள் இருப்பார்கள்.
0 comments :
Post a Comment