மைத்திரி மோடிக்கு குடைபிடிக்க த.தே.கூ அடிமைகள் மோடி முன் 8 நிமிடங்கள் நுனிக்கதிரையில் குந்தியிருந்தனர்.
இன்றுகாலை 11 மணிக்கு ஏஐ 001 விமானத்தில் மாலைதீவு பயணத்தை முடித்துக்கொண்டு கட்டுநாயக்க விமானநிலையத்தில் தனது சொந்த பாதுகாப்புடன் வந்திறங்கிய இந்திய பிரதமர் நரேந்திரமோடி நமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் அமைச்சர்களால் வரவேற்கப்பட்டதுடன் பிரமாண்டமான இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.
இன்று மதியம் ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டதுடன் நமது ஜனாதிபதி மோடியை குடைபிடித்து அழைத்துச் சென்றதை அவதானிக்க முடிந்தது. ஜனாதிபதி செயலகத்தில் மோடிக்கு மைத்திரியால் வழங்கப்பட்ட மதியபோசன உபசரிப்புடன் இந்திய தூதரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பிரதமர் , எதிர்கட்சி தலைவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேசியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தரப்பினருடனான பேச்சு அவ்வளவு திருப்திகரமாக அமைந்திருக்கவில்லை என்று அத்தரப்பு வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைப்பதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 8 எட்டு நிமிடங்கள் நுனிக்கதிரையில் குந்தியிருந்து மோடியிட்ட கட்டளைகளுக்கு தலையாட்டியுள்ளனர். அதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேச முற்பட்டபோது நான் இங்குவந்தது உங்கள் கதையை கேட்பதற்கு அல்ல பேசவேண்டுமானால் டெல்லிக்கு வாருங்கள் இப்போ கதிரையை காலி செய்யுங்கள் சம்பந்தன் ஜீ என்று கலைத்து விட்டுள்ளார்.
முஸ்லிம் மக்களை ஆத்திரப்படுத்துவதற்காக குண்டுத்தாக்குலுக்கு உள்ளான கொச்சிக்கடை தேவஸ்த்தானத்தை பார்வையிட்டதுடன் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திப்பதையும் தவிர்த்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடவேண்டியதாகும்.
அத்துடன் வெற்றிகரமாக ஐக்கிய தேசியக் கட்சியினுள் பிளவை ஏற்படுத்தி சென்றுள்ளார் என்பதும் அவதானிக்க முடிந்துள்ளது. எதிர்கால ஜனாதிபதி கனவில் மிதக்கும் சஜித் பிறேமதாஸ காலையில் ரணில் விக்கிரமசிங்கவுடன் விமான நிலையத்திற்கு மோடியை சந்திக்க சென்றதுடன், மைத்திரி மோடிக்கு மதியபோசனம் வழங்கியபோது அங்கும் அசடு வழிய நின்றதை அவதானிக்க முடிந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தி சஜித் பிறேமதாஸவை தேர்தலுக்கு இறக்கி அவரின் கீழ் பிரதம மந்திரி பதவியை பெற்றுக்கொள்ள மைத்திரிபால திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக அரசியல்வட்டாரத்தில் உலவும் ஊகங்களுக்கு மேற்படி சம்பவம் வலுச்சேர்க்கின்றது.
0 comments :
Post a Comment