Sunday, June 30, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 7 - யஹியா வாஸித்.

இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் வாழைச்சேனைக்கு மீன் யாவாரம் பண்ண போயிருந்தன், அங்க ஒரு ரெண்டுமாதம் தங்க வேண்டி இருந்தது. காலி, மாத்தற, கிரிந்த, வல்வெட்டித்துற ஊர்காவல்துற, மன்னார் மீன் யாவாரிகளுடனல்லாம் பட்டயடிச்சிருக்கம். ஆனா இந்த வாழைச்சேனையானுகள் மாதிரி மீன் யாவாரத்துல பக்கா ஜென்டில்மனுகள நான் எங்கேயும் பார்க்கல. மீனுக்கு ஒரு சங்கம். சங்கத்துக்கு பல லொறிகளும் போட்டுகளும், வாவ். பட்டய கெளப்புறானுகள்.

அவங்க போர்ர சேட்டுகளையும், அந்த பிராண்டுகளையும் பார்த்தால் நமது அய்ரோப்பிய சென் ஜோன்ஸ், சென் லூயிஸ் சேட்டுக்கள் எல்லாம் ஜகா வாங்கும்.

இந்த ஊரகாவல்தொறையிலேயும், வேலனையிலையும் நம்மளுக்கு தெரிஞ்ச கொஞ்சம் சம்மாட்டிமார் இருக்காங்க, இவர்கள வாழைச்சேனை காக்காமாருக்கிட்ட கொண்டுவந்து ஒரு குட்டி கிளாசெடுக்கணும்.

இந்த வாழைச்சேனையான் ஒரு பிளேன் டீ குடிக்கவேண்டுமென்டாலும், டீ குடிக்க வேண்டுமென்டாலும், ஒரு பெட்டீஸ் திங்க வேண்டுமென்டாலும் வாழைச்சேனையில் இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில உள்ள, கொழும்பு ரோட்டில் அமைந்துள்ள நாவலடி சந்திக்கு மோட்ட சைக்கிளை எடுத்துக்கிட்டு பறப்பாங்க அந்த அளவுக்கு, காரம், மணம், குணம் நிறைந்த பொருட்கள் நாவலடி சந்தியில சுவைக்கலாம்.

நாமும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பைக்கில் தொற்றிக்கொண்டு பறப்போம். அது ஒரு தனி ஒலகம். வாய்க்கால் தண்ணில கிளாஸ் கழுவி, வேருவ வடிய வடிய ரொட்டிவீசி, பழைய பஞ்சாய்ப்போன ரப்பர் சீட்டுல கொசு மொய்க்க, மொய்க்க அவர் அத கொண்டு வந்து வைக்க, நாங்க மெய் மறந்து அத திங்க ...அது ஒரு தனி ஒலகம்.

ஆனா அந்த நாட்களில், அந்த நாவலடி சந்தியில் ஒரு அதிசயம் நடந்து கொண்டிருந்தது. அந்த காஞ்சி போன சந்தியடியில் நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், வயோதிபர்களும், அந்த குட்டி குட்டி கடைகளுக்கு பின்னாலும், முன்னாலும், மரங்களுக்கடியிலும் நின்று சில வரைபடங்களைவைத்துக்கொண்டு குசு குசு என கதைத்துக்கொண்டிருந்தார்கள். நம்ம தொழிலே ஒட்டு கேட்கிறதும், காட்டி கொடுக்கிறதும்தானே..... காது கொடுத்தோம்.

ஆம், அனைவரும் காணி புரோக்கர்ஸ். ஹிஸ்புல்லாஹ் வுக்காக காணி தேடும் காத்தான்குடி மக்களும், அவருக்கு காணி விற்க வந்த புரோக்கர்களும். இதில் நிறைய பேர் தமிழ் இளைஞர்கள், இன்னும் சிலர் முன்னாள்
போராளிகள்.

ஒவ்வொருவரின் கைகளிலும் நூற்றுக்கணக்கான உறுதிகள், ஒப்பினைகள்.

ஒருபக்கம் வாகனேரி, புனானை, ரெதிதென்ன, வெலிகந்த, செவனப்பிட்டி, மன்னம்பிட்டி, கதுருவல மறுபக்கம் காசன்கேணி, பணிச்சம்கேணி,வாகர, பால்சேன, வெருகல், அலியுளுவ, மூதூர் என மொத்த காணி உறுதிகளும் நாவலடி சந்தியில் துள்ளி விளையாடியது.

மட்டக்களப்புகச்சேரியடியில் காணி இலக்கம் பார்க்கிறதுக்கு என்றே ஒரு கூட்டம். கச்சேரிக்குள்ள காணி உறுதி செக் பண்ணி மோட்ட பைசிக்கிள் தொடக்கம் கார், ஆட்டோ வாங்கி முன்னேறியவர்கள் பல பேர் உண்டு.

தமிழன், சோனவன் எந்த பாகு பாடும் கிடையாது, காத்தான்குடியில ஹிஸ்புல்லாஹ் ஹாஜியார்ற ஒபிசடியில, நூறு மோட்ட ச் சைக்கிள், இருநூறு புஸ்சைக்கிள், ஒபிசுக்குள்ள நம்ம முன்னாள் தோழர்கள் ஈச்சம் பழம் திண்டுக்கிட்டு, காஹ்வா( எல்லாமே அரபி ஸ்டைல் - அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது இதுதானோ ) குடித்துக்கொண்டு, ஹிஸ்புல்லாஹ்ட கோளையனுகளுக்கிட்ட கோடிகளில் வியாபாரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அரபிகள் சிலர் ஹெலிகொப்டர்களில், பலர் பஜிரோக்களில் வந்தார்கள், போனார்கள், ஹிஸ்புல்லாஹ் காலையில் கொழும்பில் இருப்பார், பகல் சாப்பாட்டுக்கு சவுதியில் இருப்பார். அரபிகள் வரும்போது கொண்டு
வரும் ஈச்சம் பழ பொட்டியை தூக்க எண்டே, எயாபோட்டில் இருந்து காத்தான்குடி வரை பஜிரோ ஒண்டு வேலை செய்யும். நாமளும் ரெண்டுதரம் அந்த ஈச்சம்பழ பெட்டிகளுடன் பயணம் செய்திருக்கின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற விருட்ச்சத்தை உருவாக்க, காத்தான் குடி மெத்தை பள்ளிவாசலடியில் அகமத் லெப்பை, அவரது தம்பி ஜவாத், ஏராவூர், ஓட்டமாவடி ஜீனியஸ்கள் மற்றும் அக்கரைப்பற்று குட்டி குட்டி புள்ளைகள் என ஒரு குழு பிள்ளையார் சுழி போடும்போது, பழைய புஸ் பைக்கில் வந்து தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த எங்கள் தானைத்தலைவர் ஹிஸ்புல்லாஹ் வையும் இன்றைய அல்லாஹ்ட புள்ள என
சொல்லிக்கொள்ளும் ஹிஸ்புல்லாஹ்வையும் நினைத்துப் பார்க்கின்றேன்.

இந்த கால கட்டங்களில் பழைய ஜி எஸ் மாருக்குத்தான்மார்க்கட். காணி இருக்கின்ற ஏரியாவ சொன்னாலே போதும், அது ரிசேர் வெர்சனா அல்லது ஒரிஜினலா என செவிட்டில் அடிச்சதுபோல் சொல்வார்கள். எல்லாருமே தமிழ் ஜி எஸ் மார்தான். ஒரு தகவலுக்கு ஐநூரில் இருந்து ரெண்டாயிரம் கைமாறும்.

பாவம் வியாளேந்திரனும், மஹா கனம் பொருந்திய அத்துரலிய ரத்னதேரரும். இந்த புதையலை தோண்ட புறப்பட்டால் நிறைய பூதங்கள் கெளம்பும்.. அந்த பூதங்கள் சுப்பர்ர அல்லது சுப்புரமணிங்களிண்ட
கொல்லைகளில் இருந்தே கெளம்பும் என்பதை தாழ்மையுடன் அறிவித்துக் கொள்கின்றோம்.

போன கெளம பணிச்சம்கேணி தமிழ் புரோக்கர் ஒருவருக்கு கோள் எடுத்தேன், தம்பி ஊர விட்டே எஸ்கேப். இந்த தம்பி ஹிஸ்புல்லஹ்வுக்கு ரிசெர்வசன் காணிகளை வாங்கி கொடுத்த ஒரு தும்பி.

நாலரை வருட முயற்சி, நாலாயிரத்து ஐநூறு கோடி முதலீடு, அறுபது ஏக்கரில் பில்டிங், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இரவுபகலாக வேலை, பல நூறு தஸ்தாவேஜுகள் பரிமாற்றம், முதலில் கம்பனி ரெஜீஸ்ரேசன் அப்புறம், குறுக்கு மூளை வேலை செய்துள்ளது, வாப்பாடையும், மகன்டையும் பேருல சரிட்டி ரெஜீஸ் ரேசன் அப்புறம் வங்கிகளில் சட்டப்படியான கணக்குகள்.

அதற்கப்புறம் மகாவலி அபிவிருத்தி நிறுவனத்திடம் சென்று குறைந்த வாடகையில் குத்தகைக்கு காணி, பீ ஓ ஐ ( Bord of Investment )இடம் சென்று ஒப்புதல் என ஒரு ஜீவ மரணப் போராட்டம் நடாத்திய இந்த அதி
புத்திசாலி, குட்டி குட்டி அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கிட்டு முழி, முழி என முளிக்கிரத பார்த்தா வெட்கமாக இருக்கின்றது.

என்னத்துக்குடா கத்தி வச்சிக்கு இருந்தயள் என்று கேட்டதற்கு..... தற்பாதுகாப்புக்கு .... தற்பாதுகாப்புக்கு ... தற்பாதுகாப்புக்கு என அடித்து சொல்லி மொத்த சோனகனின் மானங்களை காப்பாற்ற தெரியாத,
வங்குரோத்துகளுக்கெல்லாம்.....ச்சீ ...
ஒருவர் ஆளுனராம்...
ஒருவர் தண்ணிக்கு பொறுப்பாம் ...
ஒருவர் வர்த்தகத்துக்கு பொறுப்பாம் ......
ஒருவர் பெட்ரோலுக்கு பொறுப்பாம்...
இவர்கள் எல்லாம் சேர்ந்து மொத்த சோனவனுகளுக்கும்பொறுப்பாம்...

இந்த மொத்த சோனவ, தமிழ் எம்பி, எம்பிமாருகளும் ஸ்ரீலங்கா சிங்கள அரசியல் வாதிகளிடம் பாடம் படிக்கவேண்டும். அவனுகலும் கள வெடுப்பானுகள், ஒரு துரும்பும் சிறிலங்காவில் இன்வெஸ்ட் பண்ணப்
படமாட்டாது. அனைத்தும் இத்தாலி ரோம், மிலான், அவுஸ்திரேலியா, விக்டோரியா, இங்கிலாந்து, மார்பள் ஆர்ச் , அமெரிக்கா நியூ யார்க் போன்ற இடங்களில் மகள், மகன்களின் பேரில் பக்காவாக முதலிடப்படும்.

ஒரு காக்கா குருவிக்கும் தெரியாது. அழகாக முதலிட்டுப்போட்டு, மதுர மீனாட்சிய போய் ஒரு கும்பிடு, திருப்பதி வெங்கடாஜல பதிய ஒரு கும்பிடு.

யாராவது ஒரு சிங்கள எம்பி அல்லது மந்திரி கடவுளே, எங்களையும் எங்க நாட்டு மக்களையும் காப்பாத்து என ஏதாவது பன்சலவுக்கு போய் அழுது வடிந்ததை கண்டிருக்கின்றோமா அல்லது பார்த்திருக்கின்றோமா.
நெவெர். they are always brilliant.

நேரடியாக கண்டி தலதா மாளிகை போய் மகா சங்கத்தினரை சந்தித்து, மஹிந்தவிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று இவர்களும், ரணிலிடமிருந்து எங்களை காப்பாற்றுங்களேன் என்று அவர்களும் அழுவதைத்தான் இந்த உலகமே பார்த்திருக்கின்றது.

கபிலவஸ்துவுக்கு இந்த மொத்த சிங்கள மக்களும் போவார்கள் ஆனால் எந்த சிங்கள எம்பியும் போவது கிடையாது. கபிலவஸ்து போனால் இவர்களது கோவணமும் பறி போய்விடும் என்று ஒரு பழைய கதை உண்டு. ஆம் சகலவற்றையும் துறந்தவந்தானே நாம் விரும்பும் அந்த புத்த பகவான்.

மீனாட்சியிடம் போய் செய்த பாவத்தை மன்னித்து விடு தாயே என அழுதுவிட்டு, நேரடியாக வெங்கடாசலபதியிடம் போய்மண்டியிடுவார்கள்.

இந்தாள்தான் பணக்கார சாமி, திருப்பத்தையும் கொடுப்பார் அடுத்த ரவுண்டு களவெடுக்க ஐடியாவும் கொடுப்பார்.

நம்மளுக்கு இந்தாளையும் புடிக்காது, மீனாட்சியையும் புடிக்காது, மீனாட்சிக்கு பின்னால் உள்ள அறுபத்தி நாலு நாயன்மாரில், அறுபத்தி மூணாவது நாயனாரை மட்டுமே புடிக்கும். அவள்தானே நம்மாள், சோனகத்தி. முஸ்லிம்.

பாவம் ஹிஸ்புல்லாஹ் அறுபத்தி அன்ஜேக்கருல கட்டிடத்தைகட்டிப்போட்டு, இஞ்ச முழி பிதுங்கி இருக்க, ரிதி தென்னயில இருந்து கூப்பிடு தூரத்தில, நூத்தி அம்பது ஏக்கருல பாரிய கோழி பார்ம கட்டி, தினமும் ஒன்ணர லட்சம் ஒமேகா ( எகோ ப்ரீ - நோ கொலோஸ்ற்றோல்) முட்டைகளை, வத்தளையில் உள்ள தனது சொந்த அலுவலகத்தின் ஊடாக வித்துக் கொண்டிருக்கும் அமீரலி காக்காவுலயும் ஒரு கண்
வச்சிகொங்கடாபுள்ளகாள்.

அப்புறம் சோனவன் அதையும் கோமணத்துக்குள்ள ஒளிச்சிட்டான் என சண்டைக்கு வராம. அமீரலிக்கு நூற்றி அம்பது ஏக்கர், பைலா( முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் எம்பி )வுக்கு நூற்றி அம்பது ஏக்கர் காணி
with bigest poultry farm.

எல்லாமே நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர் என்ற கோஷத்துக்கு கிடைத்த கைம்மாறு.

வாழைச்சேனை பேப்பர் பாக்டரியும் பல சடங்குகளுக்கு பிறகுதான் கை மாறியதாம் என்ற ஒரு கதையும் உண்டு. அதற்குரிய கிம்பளம் செங்கலடி -பதுளை ரோட்டில் கிரசெர் மெசின் போட்டு கருங்கல் - கிரனைட் கல் பக்டரிகளாக உருவாகுவதாகவும் செய்திகள் பரவுகின்றது.

இது இப்படியெண்டால் பாவங்களை மொத்தமாக செய்துவிட்டு, உம்ராவுக்கு போய் அல்லாஹ்வையும் ஏமாற்றுகின்ற அதிபுத்திசாலிகளையும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கண்டுகொண்டுதான் இருக்கின்றார்கள்.

இந்த பரந்த உலகம் பல அதிசயங்களையும் ஆச்செரியங்களையும் கண்டுள்ளது, சானக்கியர்களையும் தரிசித்துள்ளது. இந்தமொத்தத்தையும் முழுங்கி, மென்று, இதொரு தூசிடா எங்களுக்கு எண்டு ஆப்படித்த மஹிந்த அண்ட் கோவுக்கே டுமீல் விட்டாங்க இந்த ரிசாட் வோசஸ் ரவுப் என்கின்ற முன்னாள் எதிரிகள். உம்ராவுக்கு கம்பெனிகள் சகிதமாக போய் எங்க அப்பனுகள் குதிருக்குள் இல்லை என்றார்கள்.

மஹிந்த பொறுத்தார், கோட்டாபாயவும் பொறுத்தார், ஆனால் நம்ம அல்லாஹ் பொறுக்கல்ல. காத்தான்குடியில இருந்து இன்னொரு சைத்தானை கொழும்புக்கு அனுப்பி இந்த மொத்த சைத்தானுகளுக்கும் ஆப்பு அடித்தார்.

wash..wash.....clean wash..... நல்ல தும்புக்கட்டு அல்லது ஈக்கில் கட்டு ( விளக்குமாறு ) கொண்டு, சோனக அரசியல் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

( இன்ஷாஹ் அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் தொடருவேன் ..........)
yahiyawasith@ymail.com
30-6--2019

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com