Sunday, June 16, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 5 - யஹியா வாஸித்

கள்ளத் தோணிகளில் வந்த சோனவனும் , நல்ல தோணிகளில் வந்த மகாத்மாக்களும்.

மதம், மதம், அது , உன்மதமா, என்மதமா,சம்மதமா எண்டு யாருக்குமே புரியல, அதப்பத்தி புரிஞ்சவங்களும் புரியாத எங்களுக்கு புரிய வைக்க முயலல. எல்லாரும் நாங்க புடிச்ச முயலுக்கு மூணுகால் எண்டுதான் அடிச்சி சொல்றாங்க.

பெத்தலஹேமில் பொறந்தவனோ, எதிரி ஒண்ட ஒருகன்னத்தில அறைஞ்சா, ஓன்ட மறுகன்னத்தை காட்டி அடிவாங்கு என்டு சொல்கின்றான், லும்பினியில் பொறந்தவன் - குட்டி எறும்புக்கும் தீங்கிளைக்காதே என்டு ஆணித்தரமாக சொல்லிப் போட்டான், ஹிந்துதர்மமோ சாம, பேத, தான, தர்மம் அறிந்தவர்கள் நாங்கள் வீ ஆர் ஆல்வேஸ் கிளீன் என்று சொல்கின்றது, இஸ்லாமோ உன் அடுத்த ஊட்டுக்காரன்கூட பசியோடு இருக்க விடாதே என்கின்றது.

ஆக மொத்தமாக எல்லாருமே,எல்லோருமே தர்மம் பற்றி பேசுகின்றோம், நியாயம் பற்றி மூச்சு முட்ட விவாதிக்கின்றோம், அகிம்சை பற்றி மனம் குளிர சிலாசிக்கின்றோம், ஊருக்கு ஒரு கோயில், தெருவுக்கு ஒரு பள்ளிவாசல், நீண்ட அகன்ற சர்ச்சுகள், தலையை மழுங்க வளித்து, அழகிய செவ்விழனி நிற காவி உடுத்து, புத்த சாதுக்கள் புடைசூழ பன்சல வளாகங்கள்.

ஓ இவ்வளவும் இருந்தும் ஏன் இந்த ??????மதம். மலத்தை கூட தரிசிக்க தயாரா இருக்கோம், பட் மதம்.

நான் நெனைக்கல இஸ்லாம் ஒரு மதமெண்டு, அது ஒரு மார்க்கம். இஸ்லாம், அது ஒரு அழகான மார்க்கம், அன்பான மார்க்கம், அரவணைக்க கூடிய மார்க்கம், அது ஒரு மதமல்ல, மார்க்கம். தெரியாத ஊருக்கு எப்படி போவது, எந்த மார்க்கமாக போவது, அந்த மார்க்கமாக போனால், அந்த தெரியாத ஊரை எப்படி அடையலாம் என்று அடித்து சொன்ன ஒரு மார்க்கம் எண்டுதான் நான் நெனைக்கிறன்.

அம்பாறை சந்தியில நிண்டு, இல்லாட்டி மட்டக்களப்பு பஸ்ஸிஸ்ராண்டுல நிண்டு, இல்லாட்டி ரிங்கோ பத்தாம் நம்பரடிய இருந்து, இல்லாட்டி வவுனியா ரவுண்ட போட்டடிய நிண்டு, கொழும்புக்கு போற வழியெது, கொழும்புக்கு போற மார்க்கமெது என்று கேட்டால் .........தட்ஸ் ஆல்.

மதுர மேலமாசி வீதி சந்தியில நிண்டுகிட்டு, மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு இல்லாட்டி தவிட்டு சந்தைக்கு போற மார்க்கம் என்ன என்று கேட்டால் என்ன சொல்வோம்.

இந்த மார்க்கமாக போனா, நீங்க சொன்ன இடத்துக்கு போகலாம். வழி, மார்க்கம், அமைதியாக, அன்பாக, அடக்கமாக வாழ, வழி தெரியாத வர்களுக்கு, சீரான, நேரான வழியை காட்டுவதே இஸ்லாம்.

அந்த வழியை, மார்க்கத்தை தொடர்ந்து பின்பற்றியவர்கள், அரபுநாடுகளிலும், சூடான், சோமாலிய போன்ற தேசங்களிலும் இருந்தார்கள், வாழ்ந்தார்கள்.

அய்யாமுல் ஜாஹிலி ( அறிவிலிகள் காலம் - புத்தி கொஞ்சம் கம்மி )யாக்களாக இருந்த, அந்த அரபு தேசங்களில் வசித்த மக்களுக்கு, நல்லதொரு வழிய, மார்க்கத்தை காட்ட புறப்பட்டவரதான் இன்று மொத்த சிங்கள பவுத்த தேசமும், இப்போது கொஞ்சம், மீண்டும் முருங்கை மரத்தில் ஏற முயற்சி பண்ணும் தமிழ் தம்பிகளும் திட்டித் தீர்துக்கொண்டிருக்கின்ற முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இவர் ஒரு உம்மி, படிக்காத மேதை.

இவர் என்னடா நமக்கு புத்தி சொல்லுறது என்று, அன்றைய அரபு தேசம், மக்கா வாசிகள், அவரையும் அடித்து, மிரட்டி, எரித்து திஸ் இஸ் அவர் லேன்ட் என்று கத்தி, கூப்பாடு போட்டு மக்காவை விட்டு விரட்டியடித்தார்கள், அவரும் மதீனாவுக்கு இரவோடு இரவாக ஒளித்து ஓடினார். அவருக்கு அப்போது தோணி கிடைக்கல, கிடைச்சிருந்தால் அவரும் கள்ளத்தோணியில் போயிருப்பாரோ !!!!!

இயேசு பிரானையும் நாம தானே சிலுவையில அறைஞ்ஞம், வாலியை நோக்கி மறைந்திருந்து பாய்ந்த அந்த அம்பு, உத்தமன் இராமனுடையதல்லவா ? இராமா நீயுமா என்று அந்த காட்டுக்குள் இருந்து, வாலி அலறியது, இன்னும் நமது செவிப்பறைகளை பிளந்து கொண்டல்லவா இருக்கின்றது.

சூதுகளையும், யுத்தங்களையும் பற்றித்தானே மகாபாரதம் திரும்பி, திரும்பி, செப்பி வழிகின்றது, லும்பினியில், கபிலவஸ்துவில், இந்தியாவில் பிறந்த புத்த மகானையும், இந்து சாம்ராஜ்யம் ஏற்றுக்கொள்ளவில்லையே, தெலுங்கானாவில் பிறந்த நாயக்கர்களும், பண்டார(ம்)க்களும்தானே அந்த மகானின் போதனைகளை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆக மொத்தமாக ஸ்ரீலங்கா சோனவன் செஞ்சதெல்லாம் பொள. மற்ற அனைவருமே ரொம்ப சரி.சிவ சிவா.

யாருடா இவர் புதிதாக ஒராள் நம்ம ஊருக்கு( மதினா ) வந்திருக்காராமே ! என கேள்வி கேட்க அல்லது மிரட்ட அல்லது வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு, தான் ஒரு இறை தூதர், ஐ கொட் சம் கோட் வேர்ட் ப்றம் அல்லாஹ். அவர் எனக்கு சில நல்ல செய்திகளை, மார்க்கமொன்றை சொல்லி உள்ளார். அவைகளை மக்கள் மத்தியில் சொல்லவந்தவன் நான். என்றும் சொல்லியுள்ளார்.

இவர் சொன்ன இந்த சேதிகள், தகவல்கள் மெள்ள மெள்ள ஊர் ஊராக, நாடு நாடாக பரவ யெஸ், திஸ் வே டிபரென்ட் ப்றம் அவர் ஓல்ட் வே ..........இண்டரஸ்டிங்....... ரிலாக்ஸ், நிம்மதி என கூறிக்கொண்டு சிலர், மெள்ள மெள்ள பலர், இவரது மார்க்கத்தை வே ஒப் லைப் பின்பற்ற தொடங்கினர்.

அடிமை வியாபாரம், திருட்டு, வழிப்பறி, பலதார திருமணம் என இருந்த அரேபியர்கள், முகம்மது நபியின் வழி காட்டலின் பின் வியாபாரத்தில் இறங்கினர்.

இஸ்லாம் மார்க்கம் பாரசீகம் எங்கும் பரவியது, சூடான், சோமாலியாவிலுருந்தும் மக்கள் வந்து இந்த மார்க்கத்தை படிக்க, கற்க தொடங்கினர்.

நாடுவிட்டு நாடு ஒட்டகங்களில் வியாபாரிகளாக சென்ற இந்த அரேபியர்கள், கப்பல்களை உருவாக்கி கடல் பயணங்களையும், கடல் வியாபாரங்களையும் தொடங்கினர். வாரக்கணக்காக, மாதக்கணக்காக கடல்களில் பயணஞ் சென்று நாடுநாடாக தமது வியாபாரங்களை நடாத்தினர்.

அவ்வாறு நாடு நாடாக வியாபாரத்துக்கு சென்றவர்களின் வியாபார அழகு, அவர்களது நடத்தைகள், நடவடிக்கைகள் மற்ற நாட்டில் உள்ளவர்களையும் கவர, அவர்கள் இவர்களை தங்கள் நாட்டில் உட்கார்ந்து வியாபாரம் செய்ய அனுமதித்துள்ளனர்.

அவ்வாறு ஸ்பெயின், ஜாவா, சுமத்ரா, இந்தோனேசியா, இந்தியா, பிலிப்பைன், மலேசியா, ஸ்ரீலங்கா என அவர்களது வியாபார கப்பல்கள் வந்து போயுள்ளன.

அவ்வாறு வந்தவர்களில் பலர் அந்தந்த நாடுகளில் நிரந்தரமாகவே இருந்ததுடன், அந்த நாட்டில் உள்ள பெண்களையும் திருமணம் செய்து,அங்கேயே வாழ்ந்தனர். இவர்கள் யாரும் நீங்க இஸ்லாத்துக்கு வாங்க, இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுங்க என்று, எங்குமே, எப்போதுமே சொல்லவே இல்லை. இவர்களது நடை, உடை, பாவனைகளை பார்த்தே பலர்,இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றினர்.

இவ்வாறு வந்தவர்கள் யாரும் கொலம்பஸ், வாஸ்கோடகாமா போல கடல் கொள்ளையர்களோ, அல்லது நாடுகளை பிடிக்கவந்தவர்களோ அல்ல. அய்ரோப்பியர்கள் நம்முட சகல வளங்களையும் கொள்ளை இட்டதுடன், நாடுகளையும் பிடித்து நம்மை அடிமையாக வைத்திருந்தனர். ஆனால் இவர்கள் தாம் உண்டு, தமது வியாபாரம் உண்டு என்றே இருந்துள்ளனர்.

இவர்களது நடத்தையின்பால் கவரப்பட்ட ஜாவா, சுமத்ரா, இந்தோனேசியா, மலேசிய, பிலிப்பைன், இந்தியா என பலர், அந்த, அவர்களது மார்க்கத்தை பின் பற்ற தொடங்கினர்.

குறிப்பாக இந்தியாவில் பிராமணர்களாலும்,ஏனைய உயர் சாதியினராலும் நாயைவிட கேவலமாக மதிக்கப்பட்ட, குறைந்த சாதியினருக்கு இந்த இஸ்லாம் மார்க்கத்தின் வே, வழி புடித்ததால், பலர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

இந்த பிராமணர்களும், ஹிந்து வெறியர்களும் தங்களுக்குள் குத்து வெட்டு, பட்டுக்கொண்டு எழுநூறு வருஷங்கள் முஸ்லிம்களை, இஸ்லாமியர்களை, மொகலாயர்களை, இந்தியாவை ஆளவிட்டுள்ளனர். இந்த கால கட்டங்களில், எந்த ஒரு சோனவ, இஸ்லாமிய மன்னர்களும் தங்கள் பெயர்களில் வீதிகளையோ, நகரங்களையோ, அமைக்கவும் இல்லை, தங்கள் பெயர்களை எந்த கல்லிலும் பதிக்கவுமில்லை என்பதுதான் அழகிலும் அழகு. பேரழகு.

பாபர் மசூதி கூட எங்களுக்கு சொந்தமே இல்லை, யாரோ ஹிந்துக்களின் நயம் மிக்க கட்டிடம், பிற்காலத்தில் அந்த பகுதிகளில் முஸ்லிம்கள் வசித்துள்ளார்கள். தமது தொழுகைக்கான இடமாக அந்த இடத்தை, பாவித்துள்ளார்கள் என்பதுதான் எனது கருத்து.

வெள்ளிக்கிழமை எங்களுக்கு தொழுவதற்கு இடமில்லை, பாதிரியாரே, என்று சொன்னதும், தனது கிறிஸ்தவ தேவாலயத்தை திறந்து, ஏன் இங்கு நின்று தொழுவுங்களேன் என்று சொல்லும் அநேக, கிறிஸ்தவ பாதிரிகள், மனிதப் புனிதர்கள் இங்கிலாந்து முழுக்க பரவிக்கிடக்கின்றார்கள். இது கிறிஸ்தவத்தின் இன்னொரு வெட்டுமுகம்.

ஏய் முஸ்லிம்களே, நீ எனது படைப்பு, எனது உம்மத், உனக்கு இந்த உலகில் எதுவுமே சொந்தமில்லை, ஆறடி நிலம் கூட சொந்தமில்லை, என்று இஸ்லாம் மார்க்கம் அழகாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டது.

ஆனால் நாங்கள் ஆசைப்பட்டோம், தமிழ்நாட்டில் இருந்து ஹிந்து வெறியர்களாலும், ஹிந்து உயர்சாதியினராலும் பூணூல் தாங்கியோராலும் அடித்து, நொறுக்கி, நொங்கி, தொங்கி, நாரான நாங்கள், இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய நாங்கள், எங்கள் முன்னோர்கள், எங்கள் மூதாதையர்கள், அனைவரும் ஓட வழி இன்றி ஆதங்கப்பட்டோம்.

ஆம், ஓடியுள்ளார்கள், இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய எங்கிட பெரியப்பாமார், மூத்தப்பாமார் எல்லாரும் கள்ளத்தோணியிலும், இஸ்லாம் மதத்தை தழுவாத ஆனால் பிராமணர்களிடம் நன்கு வாங்கி கட்டிய பறையர்,
வன்னியர், நளவன், வண்ணான், சாணக்கியன், சாம்புரானிகளும், பவுத்த மதத்தை தழுவிய நாயக்கர்கள், பண்டாரங்கள் எல்லோரும் நல்ல தோணிகளிலும் சயிலான் என்கின்ற, சிலோன் என்கின்ற, இரத்தின துவீபம் என்கின்ற, மலபார் என்று, கடல் கொள்ளையர்களால் பெயர் சூட்டப்பட்ட, அந்த பெரிய கண்டத்தின் ஒரு துளியான இன்றைய சிறிலங்காவில் பொத்தாம் பொதுவாக போய் இறங்கியுள்ளனர்.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, கொஞ்சம் நாகப்பட்டினம், இன்னம் கொஞ்சம் நகர்ந்து நாகர் கோயில்காரனுகள் எல்லாம் வடக்கில் இறங்க, காயல் பட்டினகாரர்கள் காத்தான்குடியில் இறங்கயுள்ளனர், வேளாங்கண்ணி, நாகூர் காரர்கள் கல்முனை, சாய்ந்தமருது, பெரிய கல்லாறு, சின்னக்கல்லாறு, ஓந்தாச்சிமடம் என கால் ஊன்ற, இன்னும் கொஞ்சம் வேளாங்கன்னிகாரர்கள் கோமாரியில் தடம் பதித்துள்ளனர். யெஸ் வீ ஆள் ஆர் புறம் இந்தியா.

தெலுங்கானாவில் பௌத்த மதத்தை தழுவியவர்களுக்கு ஓடுவதற்கு தோணியும் இல்லை, கண்ணுக்கேட்டியதூரத்தில் கடலும் இல்லை. ரொம்ப சிரமப்பட்டுள்ளர்கள்.

விஜயவாடா வந்து, கிருஷ்ணா ஆற்றில் நல்ல தோணிகளில் தவழ்ந்து ,பல நாட்கள் மிதந்து, வந்தவர்களுக்கு மாத்தற, மிரிஸ்ஸ, ஹிக்கடுவ, திஸ்ஸமஹராம கடல் படுக்கைகள்தான் ஆபத்பாந்தவனாக தெரிந்துள்ளது.

நம்மவன்,குட்டி குட்டி தோணிகளில் வந்து இறங்கி விட்டான், அது ஜஸ்ட் மரக்கலம். இவர்கள் வந்தது கொஞ்சம் பெரிய கலங்கள், அதை சும்மா தோணி என்று சொல்ல மாட்டார்கள், அலி போட்டுவ ( யானை மாதிரி தோணி ) என்றுதான் அழைப்பார்கள். சிங்கள தேசம் எங்கும் இந்த அலி போட்டை காணலாம். தெலுங்கான விஜயவாடா கரைகளில் இந்த அலி போட்டுகளை தரிசிக்கலாம்.

பட் ஆனால், நாங்க எங்கிட முன்னோர்கள், பறையர்களும், சக்கிலியர்களும், தோட்டிக்களுமாக இருந்து, இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறிய எங்கள் முன்னோர்கள், இந்த புனித தேசத்துக்கு வர முதலே, தெலுங்கானா வாசிகள், இங்கு வந்து சேர்ந்து குவேனிகளுடனும், ஊரிவரியகே வன்னியாவின் மூதாதையர்களுடனும், ஒன்றுக்குள், ஒன்றாகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த கால கட்டத்துக்கு பின்னர்தான் அரபு தேச வாசிகளின், மார்க்கத்தை பின்பற்றிய இந்தோனேசியா வாசிகள் ஹம்மான்தொட்டையிலும், ஜாவா, சுமத்ராகாரர்கள் பேருவள, காலியிலும், பரங்கிப்பேட்டையில் (பறங்கியர் பேட்டை - பிரான்ஸ் கொலனி ) இறங்கியவர்களின் வாரிசுகள், கொளும்புத்துறை முகத்தையும் வந்தடைந்து, பவுத்த மக்களுடன் இரண்டறக்கலந்துள்ளர்கள்.

அப்படி கலக்கவில்லையானால், பவுத்தர்களின் கோட்டை எனப்படும், கண்டி தலதாமாளிகையை வளைத்து, சுற்றி, அதே கால கட்டத்திலேயே, அறுபது அடிதூரத்தில், முன்னூரடி தூரத்தில், அய்னூறு மீட்டர் தூரத்தில், எழுநூற்றி அய்ம்பது மீட்டர் தூரத்தில் கிட்டத்தட்ட பதினான்கிற்கு மேற்பட்ட முஸ்லிம், சோனக பள்ளிவாசல்கள் கட்டப் பட்டிருக்க நியாயமில்லையே.

நாம் இந்த சிறிலங்காவின் சொந்தக்காரர்களுடன், மிக, மிக அந்நியோன்யமாகவே இருந்துள்ளோம், வாழ்ந்துள்ளோம். பெண்ணெடுத்துள்ளோம்.

ஆனால் இப்போது, எல்லோருக்கும், சகலருக்கும், ஆசை வரத்தொடங்கி உள்ளது, ஆசை பொறாமையாக மாறி, பொறாமை, பொல்லாமையாக தினவெடுத்து,............................
வங்குரோத்து ....அரசியல் ...சமய ...சம்பிரதாய ....வங்குரோத்து என்பது இதுதானோ ????

( இவைகளுக்கெல்லாம் முழு முதல் காரணம் கருணா அம்மானும்,பிள்ளையானும் என்துதான் அடித்து சொல்லலாம். அடுத்த பதிவில் அவர்களை பற்றி ஆராய்வோம்.....
அவர்களுக்கும் கொஞ்சம் திட்டுவோம் )


( இன்ஷாஹ் அல்லாஹ் என் இறைவன் நாடினால் தொடருவேன் ....) 15-6-2019

yahiyawasith@ymail.com

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com