Saturday, May 11, 2019

சுற்றுநிருபம் தெரியாமல் சுகாதார அமைச்சராக இருந்தேன் பகிரங்கமாக ஒத்துக்கொண்டார் சத்தியலிங்கம்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடக்கு மாகாண ஆளுனர் முன்னை நாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.

இவ் சந்திப்பில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளாராக நியமிக்கப்பட்ட வைத்தியர் சத்தியமூர்த்தியின் நியமனம் தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாண எதிர்க் கட்சி தலைவர் தவராச கேள்வியெழுப்பியிருந்தார். இதன்போது உரையாற்றிய முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்கள் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்ட நியமனம் முறைகேடானது எனவும் மத்திய சுகாதார அமைச்சால் இவ்வாறு நியமனம் வழங்கமுடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது சத்தியலிங்கத்திற்கு பதிலளிக்குமுகமாக உரையாற்றிய தவராசா, மத்திய சுகாதார அமைச்சுக்கே பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என சுற்றுநிருபத்தை காட்டி வாதிட்ட போது சத்தியலிங்கம், நான் மூன்றுவருடகாலமாக சுகாதார அமைச்சராக இருந்தும் இவ் சுற்றுநிருபத்தை படிக்கவில்லை என்பதை பகிரங்கமாக அவ் கூட்டத்தில் ஒத்துக்கொண்டார்.

சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராக இருந்தகாலத்தில் இவ்வாறாக தன்னுடைய அமைச்சின் சுற்றுநிருபங்களை படிக்காததன் காரணத்தினால் தான் நிதிமோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் போன்ற பல முறைகேடுகளில் ஈடுபட்டு பின்பு அமைச்சு பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார் என்பது தெட்டத்தெளிவாகின்றது.

No comments:

Post a Comment