Sunday, May 12, 2019

வவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்!!

வவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வவுனியா A9 பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள நொச்சிமோட்டை கிராமத்தில் உள்ள பல காணிகளுக்கு காணிக் கச்சேரி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி காணிகளை அபகரிப்பதோடு அதில் முஸ்லீம் மக்களை குடியேற்றி தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறிவருகின்றது.

சுமார் 180 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு காணிக்கச்சேரி இடம்பெற்று அவற்றில் சுமார் 100 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு இப்பிரதேசங்களை ஒரு போதும் சேர்ந்திராத பிரதேச செயலாளரின் மனைவியின் உறவினர்கள் அண்ணனின் உறவினர்கள் என ஏறத்தாழ நூறு பேருக்குமேல் இவ்வாறு காணி அனுமதிப்பத்திரங்கள் பதியப்பட்டு வவுனியா பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிருபிக்கபட்டுள்ளது

இதில் திடுக்கிடும் உன்மையாதெனில் பிரதேச செயலாளரின் உறவினர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான காணிகளை அவர்களின் பெயரில் பதிந்து பின்பு LDO காணிப்பத்திரங்களுக்கான உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றதும் முஸ்லீம்மக்களின் பெயரில் மாற்றம் செய்வதே பிரதேச செயலாளர் மற்றும் றிசாட் அமைச்சரின் திட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.இவ் சதித்திட்டத்திற்கு வவுனியாவை சேரந்த ஒரு சில வழங்கறிஞர்களும் உடந்தையாக இருக்கின்றனர்.

மேலும் நோச்சிமோட்டை கிராமம் மட்டுமல்லாது A9 பிரதான வீதியை அண்மித்த ஏனைய சில தமிழர் கிராமங்களும் இந்த சதித்திட்ட வலைக்குள் வீழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது உறுதிப்பத்திரங்கள் மாற்றப்பட்டதும் குடியேற்றங்களை சட்டரீதியாக தடுக்கமுடியாது என்பது வெளிப்படை உன்மை அடுத்த சில வருடங்களில் வவுனியா-யாழ் வீதியை அண்மித்த பல கிராமங்களில் திடீர் இனப்பரம்பல் மாற்றமடையும் சந்தர்ப்பம் இதன் மூலம் எதிர்பாக்கப்படுகிறது.

வவுனியா பிரதேச செயலாளரின் குறித்த முறையற்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆதாரபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனீபா அவர்களிடம் தெரிவித்திருந்த போதும். குறிப்பிட்ட அமைச்சரின் தலையீடு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இவ் பிரதேச செயலாளருக்கு எதிராக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிலும் பிரதேச மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது






No comments:

Post a Comment