மைத்திரி எனது அடிப்படை உரிமையை மீறிவிட்டார். நீதிமன்று செல்லும் பூஜித.
கடமையை நிறைவேற்றத் தவறிய குற்றச்சாட்டின் பெயரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர. அவ்வாறு தனக்கு விடுக்கப்பட்;டுள்ள கட்டாய விடுமுறை உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்ககோரி பூஜித் ஜயசுந்தர உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா அதிபரினால் பதில் காவல்துறை மா அதிபராக, சந்தன விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், அவர் உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
இது தொடர்பான அடிப்படை உரிமை மனுவை பூஜித ஜயசுந்தர நேற்று உச்சநீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையிலேயே பூஜித ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.
அதேவேளை, இதே குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, சிறிலங்கா அதிபரின் அறிவுறுத்தலை அடுத்து, பதவி விலகியிருந்தார். அவரும் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதே நேரம் குறித்த கொலைகளை தடுக்க தவறினார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment