Friday, May 31, 2019

முன்னாள் புலிகள் மஹிந்தருடன் பேச்சு. அடுத்த தேர்தலில் களமாடுவதாக உறுதி.

முள்ளிவாய்காலில் சுமார் 12500 புலிகளை கைது செய்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு எவரும் எதிர்பாராத விதமாக அவர்களில் 90 விகிதமானவர்களை குறுகிய காலப்பகுதியில் விடுதலை செய்திருந்தது.

இவ்வாறு புலிகள் துரித கதியில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த அரசில் பங்காளிகளாகவிருந்த சம்பிக்க ரணவக்க போன்ற தொலைநோக்கு சிந்தனை உள்ள சிலரது விமர்சனத்திற்கும் எதிர்புக்கும் உள்ளானது.

இவ்வாறான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் மஹிந்த புலிகளை விடுவித்தது பல்வேறு எதிர்பார்ப்புக்களின் மத்தியிலேயே. அவ்வாறு அவர்கள் விடுவிக்கப்பட்டபோது எழுத்தில் இல்லாத ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்தாகியிருந்தது என்பது பல்வேறு தரப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டுவந்துள்ளது.

அந்த ஒப்பந்தங்கள் பல்வேறு விடயங்களை கையாள்வது தொடர்பில் அமைந்திருந்தது. படையினர் மீதான போர்குற்றங்களை முறியடித்தல், புலிகளின் தலைமை ஒன்று உருவாகாததை உறுதி செய்து கொள்வதுடன் அவ்வாறான சிந்தனை உடையோரை இனம் கண்டு கொள்ளல், எப்போதும் நிழல் புலி அமைப்பொன்றை தொடர்ந்து பேணல் , தேர்தல்களின்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களுக்கு ஆதரவாக செயற்படுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்கான ஒப்பந்தங்களே அவ்வாற கைச்சாத்தாகியுள்ளது.

செயற்பாடுகளை கண்காணிப்பதற்கும் முன்னாள் புலிகளை கையாள்வதற்கும் பல்வேறு முகங்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பணியை மிகக்கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில் கடந்த சில வாரங்களாக எதிர்வரும் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் செயற்பாடு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பாக அவர்களது கையாளுனர்கள் திட்டங்களை வழங்கியுள்ளதுடன். அத்திட்டங்கள் தொடர்பாக வடகிழக்கில் தமது முகவர்களுக்கு மிகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி மஹிந்தருக்கு நேரடியாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அவர்களை தான் ஒருமுறை பார்க்கவேண்டும் என மஹிந்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாராளுமன்ற கட்டத்தொகுதியில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சந்திப்பின்போது நேரடியாக எந்த அறிவுறுத்தல்களையும் வழங்காத மஹிந்தர் சந்தித்ததில் மிக்க மகிழ்சி, அவர்களுடன் இணைந்து செயற்படுங்கள், உங்களுக்கான சகல வழங்களும் அங்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாத்திரம் கூறிவிட்டு நழுவிச் சென்றதாக அறியமுடிகின்றது.

மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தயக்கம் இருக்கப்போவதில்லை என்பது கருத்துக்கணிப்புக்களின் ஊடாக தெரியவருகின்றது. ஆனால் முன்னாள் புலிகள் தொடர்ந்தும் பின்கதவால் சென்று கருமம் ஆற்றும் கைங்கரியத்தை கைவிடவேண்டும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com